Monday, March 26, 2012

விகடனுக்கு நன்றி!

என்னை விட அறிவிலும், ஆற்றலிலும், புகழிலும் சிறந்தவர்கள் ஆயிரம் பேர் இருக்க, நான் படித்து ரசித்த விகடனின் “ நானும் விகடனும்” பகுதியில் என்னையும் எழுதச் சொன்னபோது சந்தோசத்தில் பேச நா எழவில்லை. எப்படி இன்றைய நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கப் போகிறேனோ தெரியவில்லை? 

படிப்பதில் ஆர்வமில்லாதிருந்த காலத்தில் அல்லது படிப்பதைப் பற்றிய அறிமுகம் இல்லாத காலத்தில் பொழுதுபோக்காக நூலகங்களுக்குச் சென்று வரும்போதும், புத்தகக் கடைகளில் ஆங்காங்கே தொங்கும் வண்ண வண்ணப் போஸ்டர்களிலுமே விகடன் எனக்கு அறிமுகமானது. ஆனால் இணையம் வந்த பிறகு, கதைகள், கவிதைகள் என்று எதையாவது எழுத ஆரம்பித்த காலங்களில் அதனை அச்சில் காணும் ஆர்வமும் எல்லோரையும் போலவே எனக்கும் ஏற்பட்டது. சில நகைச்சுவைத் துணுக்குகள், சிறுகதைகள் என்று நான் சொல்லிக் கொண்டவை என சில கிறுக்கல்களை, கணினியில் எழுதி அழகாகக் கிறுக்கல் இல்லாமல் அனுப்பியும் இருக்கிறேன். நாளாக நாளாக வாசிப்பில் ஆர்வம் அதிகரிக்க அதிகரிக்க விகடனைப் பற்றிய தெளிவும், அதன் வசீகரமும், மக்கள் மத்தியில் அதற்கு இருக்கும் செல்வாக்கும் என்னைப் பிரமிக்க வைத்தது. அந்தச் சமயத்தில்தான் நான் தமிழ்க் கீச்சுலகில் அடியெடுத்து வைக்க நினைத்து, அப்படி வைத்தால் கணினி உடைந்துவிடும் என்று பயந்து, எனது மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு ஒரு கீச்சர் கணக்கினைத் தொடங்கினேன். சில வாரங்களுக்குப் பிறகு என்னால் என்னையே நம்ப இயலாத அளவிற்கு எனது கீச்சொன்றை தனது வலைபாயுதே பகுதியில் பிரசுரித்து அளவில்லாத மகிழ்ச்சியில் தள்ளியிருந்தார்கள். மீண்டும் பல முறை எனது கீச்சுக்களை பிரசுரித்து என்னையும் ஊரறிய வைத்த பெருமை விகடனுக்கே!

இன்னும் சில மாதங்கள் கரைந்திருந்தது. கரைப்பார் கரைக்காமலே தானே கரைவதில் காலமும் ஒன்று. அப்பொழுது எனக்கு இன்னுமொரு பேரானந்ததையும் தந்திருந்தார்கள்.ஆம். விகடனின் என் விகடன் இதழில் கோவைப்பதிப்பின் வலையோசை பகுதியில் எனது வலைப்பதிவுகளைப் பற்றியும் சிறு அறிமுகம் செய்திருந்தார்கள்.  அப்பொழுதெல்லாம் நான் எஃப்.எம் கேட்பதையே விட்டிருந்தேன். FM  கேட்டாலே கோபம் வருகிற மாதிரி ஒரு உணர்வு. எனக்கே என் மேல் கோபம். அந்த RJ விடம் இருக்கிற திறமை ஏன் என்னிடம் இல்லை? ஏன் இன்னும் RJ ஆகவில்லை என்று கோபம்கொள்ளும் நிலையில் இருந்தேன். அப்பொழுது இந்த ஊக்குவிப்பு அல்லது அங்கீகாரம் கொஞ்சம் ஊக்கமளித்தது. அதைப் பற்றி அப்பொழுது எழுதிய பதிவிலிருந்து கொஞ்சம்..

”எனக்கு இத எப்படி எழுதுறதுனே தெரியலை. அவ்ளோ சந்தோசமா இருக்கேன். நானெல்லாம் இத நினைச்சுக் கூடப் பார்க்கலை. ஏன்னா கொங்கு மண்டல வலைப்பதிவர்களில் என்னை விட, ரொம்ப நல்லா எழுதுறவங்க ஆயிரம் பேர் இருக்காங்க. ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. பெரும்பாலும் விளையாட்டா எழுத ஆரம்பிச்சதுதான் என்னோட இந்த கோமாளி வலைப்பதிவு. சமூக விசயங்களை எழுதுறது ரொம்பவே குறைவு. ஏன எழுதுறதே இல்லைனு கூடச் சொல்லலாம். 

நான் வலைப்பதிவு எழுத வந்ததின் நோக்கமே மீடியாவில், முக்கியமா என்னோட லட்சியமான ஆர்.ஜே ஆவதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவும் அப்படிங்கிறதுதான். கடந்த இரண்டு வருசமா எனக்குத் தோன்றிய எதையாவது, எனக்குத் தெரிஞ்ச நடைல எழுதிட்டு வந்திருக்கேன். முக்கியமா இந்த வலைப்பதிவு எழுத ஆரம்பித்த புதிதில் எனக்கு வாசிக்கும் பழக்கமே கிடையாது. பிறகு சிறிது சிறிதாக வலையுலக நண்பர்களின், முக்கியமா எங்க டெரர்கும்மி நண்பர்களின் வழிகாட்டுதலில்தான் எனக்குப் படிக்கும் பழக்கமும், இலக்கியத்தைப் பற்றின ஒரு தெளிவும் ஏற்பட்டுச்சுனு சொல்லலாம். உண்மைல அவுங்க இல்லைனா நான் இந்த அளவுக்குக் கூட வளர்ந்திருக்க முடியாது.எல்லோரும் தங்களது வலைப்பதிவைப் பத்தி மின்னஞ்சலிட்டுக் காத்திருக்கும்போது மின்னஞ்சலே ஆனுப்பாம என் வலைப்பதிவை அறிமுகப்படுத்தினது ரொம்பவே ஆச்சர்யமா இருக்கு. அதே சமயம் என் நண்பர்கள் யாரேனும் என் வலைப்பதிவைப் பத்தி மின்னஞ்சலினார்களா என்று தெரிவயில்லை. அப்படி யாரேனும் அனுப்பியிருந்தா அவுங்களுக்கும் என்னோட நன்றிகள்.

பெரும்பாலும் நகைச்சுவைங்கிற பேர்ல நான் எழுதி வந்ததெல்லாம் சிரிக்க வைத்ததோ இல்லையோ, ஆனா இப்பக் கொஞ்சம் ஓரளவு நல்லா எழுதிப் பழகியிருக்கேன்னு நினைக்கிறேன். இந்த சமயத்தில் இப்படி ஒரு ஊக்குவிப்பு என்னை மேலும் சிறப்பா எழுதனும்ற ஒரு ஆசையை உருவாக்கியிருக்கு.

ஆர்.ஜே ஆகணும்கிற என்னோட கனவு எப்ப நிறைவேறும்னு தெரியலை.  இப்பலாம் FM கேக்கவே பிடிக்கலை. எதாச்சும் நிகழ்ச்சி கேட்டா என்னையறியாமலே கோபமும், அழுகையும் வருது. உண்மையில நமக்கு அந்தத் தகுதி இல்லையோனு கஷ்டமா இருக்கு. நானே ஒரு எப்.எம் ஸ்டேசன் தொடங்கி, இப்போ இருக்கிற வானொலிகளை விடத் தரமான, உருப்படியான விசயங்களோட, மக்களை சந்தோசப்படுத்தும் நிகழ்ச்சிகளை வழங்கனும்னுதான் ஆசை. அதிகமா ஆசைப்படுறேனோனு அடிக்கடி தோணும். ஆனா இது மாதிரி சின்னச் சின்ன சந்தோசங்கள், ஊக்குவிப்புகள் என்னை என்னோட லட்சியத்தை நோக்கித் தொடர்ந்து போகனும்கிற ஒருவிதமான தைரியத்தைக் குடுக்குதுனே சொல்லலாம். அந்த வகையில் கண்டிப்பா விகடனுக்கு என்னோட மிகப் பெரிய நன்றியைத் தெரியப்படுத்தியே ஆகணும். அதே மாதிரி ஈரோடு வலைப்பதிவர் குழுமத்துக்கும் என்னோட நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கேன்!”
இந்தப் பதிவு என்னோட கோமாளி வலைப்பதிவ ஆனந்த விகடன் - என் விகடன் கோவைப் பதிப்புல வந்த ”வலையோசை” பகுதியில  அறிமுகப்படுத்தின போது 26.03.2012 ல எழுதினது. அதன் நினைவுகள் எனக்கு இன்னும் பசுமையாவே இருக்கு. அப்புறம் சில மாதங்களில் நான் நினைச்சது மாதிரியே என்னோட லட்சியம் நிறைவேறிச்சு. ஒரு பிரபல தனியார் பண்பலை வானொலியில் ஆர்.ஜே ஆனேன். அப்பவும் இதே மாதிரி ஒரு தடவ வலையோசையில் என்னைப் பத்தியும், என் நிகழ்ச்சி பத்தியும் எழுதியிருந்தாங்க. அப்போ எழுதின பதிவிலிருந்து...

“ இந்த வாரம் எனக்கு ரொம்பவே சந்தோசமான வாரம். ஆமாங்க! இந்த வார ஆனந்தவிகடன் - வலையோசைல என்னோட நிகழ்ச்சி பத்தி எழுதி, என்னைய நல்ல ஆர்.ஜேனு சொல்லிருக்காங்க. இதுக்கு முன்னாடியே என்னோட இந்த வலைப்பதிவைப் பத்தி வலையோசைல சொல்லியிருந்தாலும், இந்தத் தடவ அத விட சந்தோசமா இருக்கேன். காரணம் என்னன்னா, என்னோட மானசீக குருவான ”மா.கா.பா ஆனந்த்” அண்ணன 2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆர்.ஜே னு விகடன் விருது கொடுத்திருக்காங்க. அதே பத்திரிக்கைல என்னையும் நல்ல RJனு சொன்னதுதான் என் சந்தோசத்துக்குக் காரணம்!”

இப்படியாக விகடனால் நான் எத்தனையோமுறை மகிழ்ச்சியடைந்திருக்கிறேன். நம்மைப் பற்றிய ஒரு செய்தி ஒலி, ஒளி ஊடகங்களைக் காட்டிலும் அச்சு ஊடகத்தில் வரும்போது அதிக சந்தோசத்தையும், மதிப்பையும் பெறுகிறது. ஒலி, ஒளி ஊடகங்களில் அது ஒளிபரப்பாகும்போதே கேட்டாலோ, பார்த்தாலோதான் உண்டு. என்னதான் அதற்குப் பிறகு அதனைப் பதிவு செய்து வைத்துக் கொண்டாலும் அதன் உயிர்ப்பு நீடிப்பதில்லை. ஆனால் அச்சு ஊடகங்கள் அதே உயிர்ப்புடன் இருப்பதே அவற்றில் வரும் நமது படைப்புக்களைக் காலம் தாண்டியும் வாழவைக்கிறது. எங்க எஃப்.எம் RJ's பத்தி விகடன்ல எழுதினப்ப அவுங்களோட சந்தோசத்தை நேர்ல பார்த்திருக்கேன். அத எழுத்துல சொல்லமுடியாது. சமகால பல்சுவை இதழ்களில் விகடனுக்கு நிகர் விகடன்தான். இந்தச் சமகாலம் என்பது விகடன் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரையும், இனியும் தொடர்வதுதான் ஆச்சர்யம்!

அன்புடன்
செல்வா.
உரிமையாளர் - இசை எஃப்.எம்.
01.07.201896 comments:

Prabu Krishna said...

எதிர்பார்ப்புகள் நிச்சயம் பூர்த்தி அடையும் அண்ணா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

செல்வாவை அறிமுகப்படுத்தி பெருமைப்படுத்திய விகடனுக்கு நன்றி.......!

ஜீ... said...

வாழ்த்துக்கள் செல்வா! எனக்கும் உங்கள் நகைச்சுவை எழுத்து மிகப்பிடிக்கும்! குறிப்பா செல்வா கதைகள்! :-)

சௌந்தர் said...

நான் புக் படிக்கும் போது உன் பெயரை பார்த்து ரொம்ப சந்தோசப்பட்டேன் டா..

வாழ்த்துக்கள் டா...

அன்புடன்
செல்வா.
உரிமையாளர் - இசை எஃப்.எம்.
01.07.2018///

இது அதை விட சூப்பர்...

வெங்கட் said...

வாழ்த்துக்கள் செல்வா..

ஆயிரம் முறை முயற்சி செய்யாதே..
ஆயிரம் வழிகளில் முயற்சி செய்..!
உன் லட்சியம் கை கூடும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////முக்கியமா எங்க டெரர்கும்மி நண்பர்களின் வழிகாட்டுதலில்தான் எனக்குப் படிக்கும் பழக்கமும், இலக்கியத்தைப் பற்றின ஒரு தெளிவும் ஏற்பட்டுச்சுனு சொல்லலாம். உண்மைல அவுங்க இல்லைனா நான் இந்த அளவுக்குக் கூட வளர்ந்திருக்க முடியாது.///////

பார்ரா........?

Prabu Krishna said...

படம் இப்போது தான் சேர்த்தீர்களா? முன்பு படிக்கும் போது காணவில்லை?

இது முதல் வெற்றி, இனி முழுதும் வெற்றி தான். சியர்ஸ் அண்ணா.

NAAI-NAKKS said...

வாழ்த்துக்கள்...செல்வா...

Madhavan Srinivasagopalan said...

Greetings Selva.

But, For Fun following comments..

//அறிமுகப்படுத்தி பெருமைப்படுத்திய விகடனுக்கு //
நாம வாங்குற அஞ்சுக்கும் பத்துக்கும் ஏன் இந்த விளம்பரம்..?

// எனக்கு இத எப்படி எழுதுறதுனே தெரியலை. //

சும்மாவே இவன் கட்டுவான்..
காட்டு காட்டுன்னு சொன்னா காட்டாம இருப்பானா ?
எதையா.. ? மொக்கையத்தான்

ப.செல்வக்குமார் said...

@ பிரபு : நன்றிகள் :))))

மாலுமி said...

வாழ்த்துக்கள் செல்வா :-)))

கனவுகள் உறங்குவதில்லை
முயற்சிகள் தோல்வி கண்டதில்லை

ப.செல்வக்குமார் said...

@ ராம்ஸ் : நன்றிணா :)))))

ப.செல்வக்குமார் said...

@ ஜீ :

நன்றிங்க. ஆனா எனக்கு நீங்க எழுதுறது பிடிக்கும்..

suganthan said...

எதிர்பார்ப்புக்கள் பூர்த்தியடைய எனது வாழ்த்துக்கள்

ப.செல்வக்குமார் said...

@ சௌந்தர் :

மிக்க நன்றிகள் :))))

ப.செல்வக்குமார் said...

@ வெங்கட் :

கண்டிப்பா அண்ணா. முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன்.. :))

Mohamed Faaique said...

வாழ்த்துக்கள் பாஸ்

ப.செல்வக்குமார் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
////முக்கியமா எங்க டெரர்கும்மி நண்பர்களின் வழிகாட்டுதலில்தான் எனக்குப் படிக்கும் பழக்கமும், இலக்கியத்தைப் பற்றின ஒரு தெளிவும் ஏற்பட்டுச்சுனு சொல்லலாம். உண்மைல அவுங்க இல்லைனா நான் இந்த அளவுக்குக் கூட வளர்ந்திருக்க முடியாது.///////

பார்ரா........?//

பின்ன, எதாச்சும் பிரச்சினைனா அடிவாங்கறதுக்கு :)))))

ப.செல்வக்குமார் said...

@ நாய் - நக்ஸ் :

நன்றிகள் சார்..

ப.செல்வக்குமார் said...

@ மாதவன் :

நன்றிகள்ணா..

// சும்மாவே இவன் கட்டுவான்..
காட்டு காட்டுன்னு சொன்னா காட்டாம இருப்பானா ?
எதையா.. ? மொக்கையத்தான்//

ஐயோ, பஞ்ச்லாம் வேண்டாம் :))))))

ப.செல்வக்குமார் said...

@ மாலுமி :

நன்றிணா.. கண்டிப்பா அந்த நம்பிக்கைதான் :))

Giri Ramasubramanian said...

வாழ்த்துகள் ப்ரதர்.

மென்மேலும் பெரிய பெரிய படிகளை எட்டிப்பிடித்து ஏறிட வாழ்த்துகள்!

siva sankar said...

வாழ்த்துக்கள் பிரதர்
கனவுகள் நிச்சயம் நிறைவேறும்

கடல்புறா said...

பார்ரா... செல்வா க்கு செண்டிமெண்ட் கூட நல்லா வருது...
வாழ்துக்கள் தலைவா..

தினேஷ்குமார் said...

வாழ்த்துக்கள் செல்வா....

தினேஷ்குமார் said...

அன்புடன்
செல்வா.
உரிமையாளர் - இசை எஃப்.எம்.
01.07.2018

கனவுகள் நிறைவேறும் செல்வா கவலைகளை முடக்கிவிட்டு பயணத்தை துவக்கு .....

ப.செல்வக்குமார் said...

// Giri Ramasubramanian said...
வாழ்த்துகள் ப்ரதர்.

மென்மேலும் பெரிய பெரிய படிகளை எட்டிப்பிடித்து ஏறிட வாழ்த்துகள்!//

நன்றிணா :))))

ப.செல்வக்குமார் said...

// வாழ்த்துக்கள் பிரதர்
கனவுகள் நிச்சயம் நிறைவேறும்//

நன்றிகள் :))

ப.செல்வக்குமார் said...

// கடல்புறா said...
பார்ரா... செல்வா க்கு செண்டிமெண்ட் கூட நல்லா வருது...
வாழ்துக்கள் தலைவா..//

நன்றிங்க :)))

அழகர் said...

தாங்கள் நகைச்சுவை பதிவுகள் என் மனதை லேசாக்குகின்றன :-)

ப.செல்வக்குமார் said...

//கனவுகள் நிறைவேறும் செல்வா கவலைகளை முடக்கிவிட்டு பயணத்தை துவக்கு .//

கண்டிப்பாக :))

ப.செல்வக்குமார் said...

@ அழகர் :

ரொம்ப நன்றிங்க. மகிழ்ச்சி :))

அழகர் said...

////முக்கியமா எங்க டெரர்கும்மி நண்பர்களின் வழிகாட்டுதலில்தான் எனக்குப் படிக்கும் பழக்கமும், இலக்கியத்தைப் பற்றின ஒரு தெளிவும் ஏற்பட்டுச்சுனு சொல்லலாம். உண்மைல அவுங்க இல்லைனா நான் இந்த அளவுக்குக் கூட வளர்ந்திருக்க முடியாது.///////

டெரர் கும்மி என்ன அவ்ளோபெரிய அப்பாடக்கர் க்ரூப்பா? :-)

அழகர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////முக்கியமா எங்க டெரர்கும்மி நண்பர்களின் வழிகாட்டுதலில்தான் எனக்குப் படிக்கும் பழக்கமும், இலக்கியத்தைப் பற்றின ஒரு தெளிவும் ஏற்பட்டுச்சுனு சொல்லலாம். உண்மைல அவுங்க இல்லைனா நான் இந்த அளவுக்குக் கூட வளர்ந்திருக்க முடியாது.///////

பார்ரா........?//

என்ன பார்ரா? பன்னிகுட்டிய எல்லாம் நாங்க பார்க்குறது இல்ல :-)

அழகர் said...

ப.செல்வக்குமார் said...
@ அழகர் :

ரொம்ப நன்றிங்க. மகிழ்ச்சி :))////தம்பி..அந்த மகிழ்ச்சியோட இன்னொரு பதிவு எழுதிராதிங்க..நாடு தாங்காது :-)

ப.செல்வக்குமார் said...

// தம்பி..அந்த மகிழ்ச்சியோட இன்னொரு பதிவு எழுதிராதிங்க..நாடு தாங்காது :-)//

அப்ப உடனே எழுத வேண்டியதுதான் :))))

அழகர் said...

என்னையும் எழுதச் சொன்னபோது சந்தோசத்தில் பேச நா எழவில்லை.//

நாக்க நாலு இன்ச் நீட்ட சொல்லி சூட்டு கோலால இழுத்தா நல்லா எழும் :-))

Madhavan Srinivasagopalan said...

@ அழகர்

சித்திர மாசம் வைகையாத்துல இறங்குவாரே..
அது நீங்கதானா..?

அழகர் said...

எப்படி இன்றைய நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கப் போகிறேனோ தெரியவில்லை?//

தம்ப்ரி...உனக்கே தெரியலைனா எங்களுக்கு எப்பிடி தெரியும்? :-)

ப.செல்வக்குமார் said...

நான் இங்கே இல்லை. நன்றி வணக்கம் :))

அழகர் said...

Madhavan Srinivasagopalan said...
@ அழகர்

சித்திர மாசம் வைகையாத்துல இறங்குவாரே..
அது நீங்கதானா..?//

தங்கள் கருத்துரைகளும் என் மனதை லேசாக்குகின்றன நண்பரே :-)

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

//////அழகர் said...
தாங்கள் நகைச்சுவை பதிவுகள் என் மனதை லேசாக்குகின்றன :-)
///////

புடிச்சு வைச்சுக்க, இல்லேன்னா லேசாகி அப்படியே பறந்துட போவுது.

இம்சைஅரசன் பாபு.. said...

//முக்கியமா எங்க டெரர்கும்மி நண்பர்களின் வழிகாட்டுதலில்தான் எனக்குப் படிக்கும் பழக்கமும், இலக்கியத்தைப் பற்றின ஒரு தெளிவும் ஏற்பட்டுச்சுனு சொல்லலாம். உண்மைல அவுங்க இல்லைனா நான் இந்த அளவுக்குக் கூட வளர்ந்திருக்க முடியாது.//
யாரப்பா அது டெரர் கும்மி ..எனக்கும் கொஞ்சம் வழிகாட்ட கூடாதா ?
வாழ்த்துகள் செல்வா ..மேலும் மேலும் பல இலக்கிய கதை எழுதி ..வெற்றி பெற மனமார அண்ணன் நான் வாழ்த்துகிறேன்

அழகர் said...

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...
//////அழகர் said...
தாங்கள் நகைச்சுவை பதிவுகள் என் மனதை லேசாக்குகின்றன :-)
///////

புடிச்சு வைச்சுக்க, இல்லேன்னா லேசாகி அப்படியே பறந்துட போவுது///

புடிச்சி வைக்க நான் என்ன உன்னமாதிரி மாமூல் வாங்குற போலிஸ்னு நினைச்சியா? :-)

அழகர் said...

இம்சைஅரசன் பாபு.. said...
//முக்கியமா எங்க டெரர்கும்மி நண்பர்களின் வழிகாட்டுதலில்தான் எனக்குப் படிக்கும் பழக்கமும், இலக்கியத்தைப் பற்றின ஒரு தெளிவும் ஏற்பட்டுச்சுனு சொல்லலாம். உண்மைல அவுங்க இல்லைனா நான் இந்த அளவுக்குக் கூட வளர்ந்திருக்க முடியாது.//
யாரப்பா அது டெரர் கும்மி ..எனக்கும் கொஞ்சம் வழிகாட்ட கூடாதா ?
வாழ்த்துகள் செல்வா ..மேலும் மேலும் பல இலக்கிய கதை எழுதி ..வெற்றி பெற மனமார அண்ணன் நான் வாழ்த்துகிறேன்///

ஆமா..இவரு வாழ்த்தினா அப்பிடியே அண்ணல் காந்தியடிகள் வாழ்த்தின மாதிரி?.. போங்க சார்..போய் புள்ளைகுட்டிகளை படிக்க வைங்க :-)

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

////// அழகர் said...
////முக்கியமா எங்க டெரர்கும்மி நண்பர்களின் வழிகாட்டுதலில்தான் எனக்குப் படிக்கும் பழக்கமும், இலக்கியத்தைப் பற்றின ஒரு தெளிவும் ஏற்பட்டுச்சுனு சொல்லலாம். உண்மைல அவுங்க இல்லைனா நான் இந்த அளவுக்குக் கூட வளர்ந்திருக்க முடியாது.///////

டெரர் கும்மி என்ன அவ்ளோபெரிய அப்பாடக்கர் க்ரூப்பா? :-)
//////////

குட் கொஸ்டின்........ இப்படி பக்கத்துல வாங்க...... டீட்டெயிலா பேசுவோம்... டேய் தம்பி ஒரு டீ சொல்றா......

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

//////அழகர் said...
சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...
//////அழகர் said...
தாங்கள் நகைச்சுவை பதிவுகள் என் மனதை லேசாக்குகின்றன :-)
///////

புடிச்சு வைச்சுக்க, இல்லேன்னா லேசாகி அப்படியே பறந்துட போவுது///

புடிச்சி வைக்க நான் என்ன உன்னமாதிரி மாமூல் வாங்குற போலிஸ்னு நினைச்சியா? :-)
////////

டேய் இப்ப நீ எதுக்கு டூட்டிய பத்தி பேசுற....? அண்ணன் லவ் மூடுல இருக்கறதால உன்னைய மன்னிச்சி விடுறேன், அப்படியே கெளம்பு...

அழகர் said...

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...
////// அழகர் said...
////முக்கியமா எங்க டெரர்கும்மி நண்பர்களின் வழிகாட்டுதலில்தான் எனக்குப் படிக்கும் பழக்கமும், இலக்கியத்தைப் பற்றின ஒரு தெளிவும் ஏற்பட்டுச்சுனு சொல்லலாம். உண்மைல அவுங்க இல்லைனா நான் இந்த அளவுக்குக் கூட வளர்ந்திருக்க முடியாது.///////

டெரர் கும்மி என்ன அவ்ளோபெரிய அப்பாடக்கர் க்ரூப்பா? :-)
//////////

குட் கொஸ்டின்........ இப்படி பக்கத்துல வாங்க...... டீட்டெயிலா பேசுவோம்... டேய் தம்பி ஒரு டீ சொல்றா......//

அதகூட உங்களால ஓசி டீ குடிக்காம பேச முடியாதா? :-)

/////அழகர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////முக்கியமா எங்க டெரர்கும்மி நண்பர்களின் வழிகாட்டுதலில்தான் எனக்குப் படிக்கும் பழக்கமும், இலக்கியத்தைப் பற்றின ஒரு தெளிவும் ஏற்பட்டுச்சுனு சொல்லலாம். உண்மைல அவுங்க இல்லைனா நான் இந்த அளவுக்குக் கூட வளர்ந்திருக்க முடியாது.///////

பார்ரா........?//

என்ன பார்ரா? பன்னிகுட்டிய எல்லாம் நாங்க பார்க்குறது இல்ல :-)
//////////

அப்போ முழுசா வளர்ந்த பன்னிய பாரு... டேய் தம்பி, அண்ணனுக்கு அந்த பன்னிப்பயல தூக்கி காட்ரா..

அழகர் said...

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...
புடிச்சி வைக்க நான் என்ன உன்னமாதிரி மாமூல் வாங்குற போலிஸ்னு நினைச்சியா? :-)
////////

டேய் இப்ப நீ எதுக்கு டூட்டிய பத்தி பேசுற....? அண்ணன் லவ் மூடுல இருக்கறதால உன்னைய மன்னிச்சி விடுறேன், அப்படியே கெளம்பு...//

யோவ்.. சும்மா காமெடி பண்ணாத...லவ் பண்ணனும்னா காலைல கண்ணாடி பார்க்கணும்! நீ என்ன அந்த டெரர் க்ரூப் பாபுவா? அழகா இருக்குறதுக்கு? :-)

///////அழகர் said...
சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...
////// அழகர் said...
////முக்கியமா எங்க டெரர்கும்மி நண்பர்களின் வழிகாட்டுதலில்தான் எனக்குப் படிக்கும் பழக்கமும், இலக்கியத்தைப் பற்றின ஒரு தெளிவும் ஏற்பட்டுச்சுனு சொல்லலாம். உண்மைல அவுங்க இல்லைனா நான் இந்த அளவுக்குக் கூட வளர்ந்திருக்க முடியாது.///////

டெரர் கும்மி என்ன அவ்ளோபெரிய அப்பாடக்கர் க்ரூப்பா? :-)
//////////

குட் கொஸ்டின்........ இப்படி பக்கத்துல வாங்க...... டீட்டெயிலா பேசுவோம்... டேய் தம்பி ஒரு டீ சொல்றா......//

அதகூட உங்களால ஓசி டீ குடிக்காம பேச முடியாதா? :-)
//////////

தம்பி... ஒரு சிங்கிள் ஓசி டீக்கே அலுத்துக்கிறீங்களே, நாங்க டூட்டில காலைல இருந்து நைட்டு வரைக்கும் ஓசில குளிக்கிறோமே, அத பார்த்தா என்ன பண்ணுவீங்க?

அழகர் said...

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

என்ன பார்ரா? பன்னிகுட்டிய எல்லாம் நாங்க பார்க்குறது இல்ல :-)
//////////

அப்போ முழுசா வளர்ந்த பன்னிய பாரு... டேய் தம்பி, அண்ணனுக்கு அந்த பன்னிப்பயல தூக்கி காட்ரா..///

போங்க சார்..போங்க.. நாங்க எல்லாம் பாலிடால் மேலே பாய் போட்டு படுக்குரவங்க :-)

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

///////அழகர் said...
சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...
புடிச்சி வைக்க நான் என்ன உன்னமாதிரி மாமூல் வாங்குற போலிஸ்னு நினைச்சியா? :-)
////////

டேய் இப்ப நீ எதுக்கு டூட்டிய பத்தி பேசுற....? அண்ணன் லவ் மூடுல இருக்கறதால உன்னைய மன்னிச்சி விடுறேன், அப்படியே கெளம்பு...//

யோவ்.. சும்மா காமெடி பண்ணாத...லவ் பண்ணனும்னா காலைல கண்ணாடி பார்க்கணும்! நீ என்ன அந்த டெரர் க்ரூப் பாபுவா? அழகா இருக்குறதுக்கு? :-)
/////////

தம்பி லவ் பண்ணனும்னா மான்சுதான் வேணும், கண்ணாடி இல்ல. ஆமா இப்போ எதுக்கு நீ அந்த டெரர் க்ரூப் பாபுவ இழுக்குற? அவர் என்ன அப்படி அழகா, என்னைய விட?

அழகர் said...

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

//////////

குட் கொஸ்டின்........ இப்படி பக்கத்துல வாங்க...... டீட்டெயிலா பேசுவோம்... டேய் தம்பி ஒரு டீ சொல்றா......//

அதகூட உங்களால ஓசி டீ குடிக்காம பேச முடியாதா? :-)
//////////

தம்பி... ஒரு சிங்கிள் ஓசி டீக்கே அலுத்துக்கிறீங்களே, நாங்க டூட்டில காலைல இருந்து நைட்டு வரைக்கும் ஓசில குளிக்கிறோமே, அத பார்த்தா என்ன பண்ணுவீங்க?

ஓசில குளிக்கிறது இருக்கட்டும்..போய் முதல்ல குளிச்சிட்டு வாங்க சார்.. காப்பு தாங்கல :-)

அழகர் said...

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

யோவ்.. சும்மா காமெடி பண்ணாத...லவ் பண்ணனும்னா காலைல கண்ணாடி பார்க்கணும்! நீ என்ன அந்த டெரர் க்ரூப் பாபுவா? அழகா இருக்குறதுக்கு? :-)
/////////

தம்பி லவ் பண்ணனும்னா மான்சுதான் வேணும், கண்ணாடி இல்ல. ஆமா இப்போ எதுக்கு நீ அந்த டெரர் க்ரூப் பாபுவ இழுக்குற? அவர் என்ன அப்படி அழகா, என்னைய விட?///

அதெல்லாம் தெரியாது சார்..ஊருக்குள்ள அப்பிடித்தான் பேசி இருக்கு! இவருதான் அசீத் குமாருக்கு போட்டின்னு :-)

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

///////அழகர் said...
சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

என்ன பார்ரா? பன்னிகுட்டிய எல்லாம் நாங்க பார்க்குறது இல்ல :-)
//////////

அப்போ முழுசா வளர்ந்த பன்னிய பாரு... டேய் தம்பி, அண்ணனுக்கு அந்த பன்னிப்பயல தூக்கி காட்ரா..///

போங்க சார்..போங்க.. நாங்க எல்லாம் பாலிடால் மேலே பாய் போட்டு படுக்குரவங்க :-)
//////////

தம்பி அந்த பாலிடாலையே நாங்கதான் தம்பி உருவாக்குறோம்.

ப.செல்வக்குமார் said...

ஐயா, சாமி ரீலு அந்து போச்சு...

அழகர் said...

ப.செல்வக்குமார் said...
ஐயா, சாமி ரீலு அந்து போச்சு...//

தம்பி..இரண்டு சிங்கங்கள் மோதும்போது எலிகள் வேடிக்கை பார்ப்பதே உத்தமம் :-)

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

///////அழகர் said...
சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

//////////

குட் கொஸ்டின்........ இப்படி பக்கத்துல வாங்க...... டீட்டெயிலா பேசுவோம்... டேய் தம்பி ஒரு டீ சொல்றா......//

அதகூட உங்களால ஓசி டீ குடிக்காம பேச முடியாதா? :-)
//////////

தம்பி... ஒரு சிங்கிள் ஓசி டீக்கே அலுத்துக்கிறீங்களே, நாங்க டூட்டில காலைல இருந்து நைட்டு வரைக்கும் ஓசில குளிக்கிறோமே, அத பார்த்தா என்ன பண்ணுவீங்க?

ஓசில குளிக்கிறது இருக்கட்டும்..போய் முதல்ல குளிச்சிட்டு வாங்க சார்.. காப்பு தாங்கல :-)
/////////

என்னது குளிக்கிறதா.... எங்க டிப்பார்ட்மெண்ட் ட்ரைனிங்க்லயே அதெல்லாம் சொல்லித்தரல, அப்புறம் நான் எப்படி குளிக்கிறது?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

//////அழகர் said...
சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

யோவ்.. சும்மா காமெடி பண்ணாத...லவ் பண்ணனும்னா காலைல கண்ணாடி பார்க்கணும்! நீ என்ன அந்த டெரர் க்ரூப் பாபுவா? அழகா இருக்குறதுக்கு? :-)
/////////

தம்பி லவ் பண்ணனும்னா மான்சுதான் வேணும், கண்ணாடி இல்ல. ஆமா இப்போ எதுக்கு நீ அந்த டெரர் க்ரூப் பாபுவ இழுக்குற? அவர் என்ன அப்படி அழகா, என்னைய விட?///

அதெல்லாம் தெரியாது சார்..ஊருக்குள்ள அப்பிடித்தான் பேசி இருக்கு! இவருதான் அசீத் குமாருக்கு போட்டின்னு :-)
////////

எதுல போட்டி, பட்டம் விடுறதுலயா? இருக்க வேண்டியதுதான்..

ப.செல்வக்குமார் said...

/// தம்பி..இரண்டு சிங்கங்கள் மோதும்போது எலிகள் வேடிக்கை பார்ப்பதே உத்தமம் :-)//

நன்றி. நான் வடைபெறுகிறேன்..

அழகர் said...

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

ஓசில குளிக்கிறது இருக்கட்டும்..போய் முதல்ல குளிச்சிட்டு வாங்க சார்.. காப்பு தாங்கல :-)
/////////

என்னது குளிக்கிறதா.... எங்க டிப்பார்ட்மெண்ட் ட்ரைனிங்க்லயே அதெல்லாம் சொல்லித்தரல, அப்புறம் நான் எப்படி குளிக்கிறது?//

என்ன சார் நீங்க? போய் அஞ்சரைக்குள்ள வண்டி படம் பாருங்க..அதுல சகீலா சொல்லித்தருவாங்க... உங்களுக்கு யோகம் இருந்தா அவங்களே குளிப்பாட்டி விட வருவாங்க

ஒரு அதிகாரி இவ்ளோ நேரம் தம் கட்டி சண்ட போட்டுக்கிட்டு இருக்கேன், எந்த நாதாரியாவது வந்து வெலக்கிவிடுதான்னு பாரு......

ப.செல்வக்குமார் said...

// ஒரு அதிகாரி இவ்ளோ நேரம் தம் கட்டி சண்ட போட்டுக்கிட்டு இருக்கேன், எந்த நாதாரியாவது வந்து வெலக்கிவிடுதான்னு பாரு...../

எனக்கு பயந்து பயந்து வருது...

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

//////அழகர் said...
சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

ஓசில குளிக்கிறது இருக்கட்டும்..போய் முதல்ல குளிச்சிட்டு வாங்க சார்.. காப்பு தாங்கல :-)
/////////

என்னது குளிக்கிறதா.... எங்க டிப்பார்ட்மெண்ட் ட்ரைனிங்க்லயே அதெல்லாம் சொல்லித்தரல, அப்புறம் நான் எப்படி குளிக்கிறது?//

என்ன சார் நீங்க? போய் அஞ்சரைக்குள்ள வண்டி படம் பாருங்க..அதுல சகீலா சொல்லித்தருவாங்க... உங்களுக்கு யோகம் இருந்தா அவங்களே குளிப்பாட்டி விட வருவாங்க
////////

ஷக்கீலா...? நைஸ்ஸ் கேர்ள்..... படத்துல பார்த்தது... பட் இப்போ நான் சைவமாகிட்டேன், நோ நோ..... அதெல்லாம் எனக்கு வேணாம்....

அழகர் said...

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

தம்பி லவ் பண்ணனும்னா மான்சுதான் வேணும், கண்ணாடி இல்ல. ஆமா இப்போ எதுக்கு நீ அந்த டெரர் க்ரூப் பாபுவ இழுக்குற? அவர் என்ன அப்படி அழகா, என்னைய விட?///

அதெல்லாம் தெரியாது சார்..ஊருக்குள்ள அப்பிடித்தான் பேசி இருக்கு! இவருதான் அசீத் குமாருக்கு போட்டின்னு :-)
////////

எதுல போட்டி, பட்டம் விடுறதுலயா? இருக்க வேண்டியதுதான்..///

அது என்ன சார் பட்டம்? புது ஐட்டமா இருக்கே? உங்கள மீறியா?

ஒரு அதிகாரி இவ்ளோ நேரம் தம் கட்டி சண்ட போட்டுக்கிட்டு இருக்கேன், எந்த நாதாரியாவது வந்து வெலக்கிவிடுதான்னு பாரு......//

என்ன சார் நீங்க? மாமூல் வாங்க மட்டும் மிடுக்கா வர்றீங்க...சண்டை போட இப்பிடி பயப்படறீங்க? போங்க சார்..போய் டெரர் க்ரூப்கிட்ட ட்ரைனிங் எடுங்க

தம்பி எத சொன்னாலும் அதே நெனப்பாவே இருக்கே, கொஞ்சம் இஞ்சித்தண்ணிய குடிச்சுட்டு வா பேசுவோம்....

அழகர் said...

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...
என்ன சார் நீங்க? போய் அஞ்சரைக்குள்ள வண்டி படம் பாருங்க..அதுல சகீலா சொல்லித்தருவாங்க... உங்களுக்கு யோகம் இருந்தா அவங்களே குளிப்பாட்டி விட வருவாங்க
////////

ஷக்கீலா...? நைஸ்ஸ் கேர்ள்..... படத்துல பார்த்தது... பட் இப்போ நான் சைவமாகிட்டேன், நோ நோ..... அதெல்லாம் எனக்கு வேணாம்....//

ஹெல்லோ மிஸ்டர்... உங்கள பார்க்கத்தான் சொன்னாங்க..கடிச்சி திங்க சொல்லல...

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

/////அழகர் said...
சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...
ஒரு அதிகாரி இவ்ளோ நேரம் தம் கட்டி சண்ட போட்டுக்கிட்டு இருக்கேன், எந்த நாதாரியாவது வந்து வெலக்கிவிடுதான்னு பாரு......//

என்ன சார் நீங்க? மாமூல் வாங்க மட்டும் மிடுக்கா வர்றீங்க...சண்டை போட இப்பிடி பயப்படறீங்க? போங்க சார்..போய் டெரர் க்ரூப்கிட்ட ட்ரைனிங் எடுங்க
///////

தம்பி.. உயர்அதிகாரிகள்லாம் அப்படித்தான் இருப்பாங்க, அதையெல்லாம் பெருசுபடுத்தப்படாது, போயி நாலு கடைல வசூல் பண்ணிட்டு வாங்க, நான் கெளம்பனும்.....

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

//////அழகர் said...
சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...
என்ன சார் நீங்க? போய் அஞ்சரைக்குள்ள வண்டி படம் பாருங்க..அதுல சகீலா சொல்லித்தருவாங்க... உங்களுக்கு யோகம் இருந்தா அவங்களே குளிப்பாட்டி விட வருவாங்க
////////

ஷக்கீலா...? நைஸ்ஸ் கேர்ள்..... படத்துல பார்த்தது... பட் இப்போ நான் சைவமாகிட்டேன், நோ நோ..... அதெல்லாம் எனக்கு வேணாம்....//

ஹெல்லோ மிஸ்டர்... உங்கள பார்க்கத்தான் சொன்னாங்க..கடிச்சி திங்க சொல்லல...
////////

ஹலோ.... நானும் அத பத்திதான் சொன்னேன், நான் இப்போ எல்லா விஷயத்திலயும் சைவமாகிட்டேன், தெரியும்ல.....

அழகர் said...

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

////////

தம்பி எத சொன்னாலும் அதே நெனப்பாவே இருக்கே, கொஞ்சம் இஞ்சித்தண்ணிய குடிச்சுட்டு வா பேசுவோம்....//

எனக்கு தெரிஞ்ச ஒருத்தரு இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருப்பாரு...அவர பார்த்துட்டு வரலாமா சார்?

தம்பி.. உயர்அதிகாரிகள்லாம் அப்படித்தான் இருப்பாங்க, அதையெல்லாம் பெருசுபடுத்தப்படாது, போயி நாலு கடைல வசூல் பண்ணிட்டு வாங்க, நான் கெளம்பனும்.....///

போங்க சார்...உங்களைப்பார்த்தா எனக்கு ஜிப்பு ஜிப்பா வருது

ப.செல்வக்குமார் said...

நான் இப்ப என்ன பண்ணனும் ?

அவர பார்த்தா நீ ரிட்டன் வரமாட்டியே....?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

////// அழகர் said...
சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...
///////

தம்பி.. உயர்அதிகாரிகள்லாம் அப்படித்தான் இருப்பாங்க, அதையெல்லாம் பெருசுபடுத்தப்படாது, போயி நாலு கடைல வசூல் பண்ணிட்டு வாங்க, நான் கெளம்பனும்.....///

போங்க சார்...உங்களைப்பார்த்தா எனக்கு ஜிப்பு ஜிப்பா வருது
///////

டேய்ய் இப்ப எதுக்கு நீ ஜிப்ப கழட்டுற......? இதுதான் கொரில்லா செல்லா.....?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

/////ப.செல்வக்குமார் said...
நான் இப்ப என்ன பண்ணனும் ?
//////

என் கூட மாமுல் வாங்க வரனும்...

அழகர் said...

ப.செல்வக்குமார் said...

நான் இப்ப என்ன பண்ணனும் ?//

ஐயோ சண்டை நடக்குதுன்னு யாரையாவது போய் பஞ்சாயத்துக்கு கூப்புடணும்..இல்லைனா நாய் நக்ஸ் பிரீயாத்தான் இருப்பாரு..போய் கூப்புடு

Giri Ramasubramanian said...

விஷயம் என்னன்னா இந்த எஃப் எம் எல்லாம் ரொம்ப சிறுசு... ஒரு ஜி.எம்., ஹெச்.எம்., பி.எம்., ஆர்.எம் (ரயில்வே மினிசுடரப்பா), என்று பெரிசு பெரிசா எதாவது ஆகிடப்பா.

நாங்களும் கடேசி காலத்துல உன் தயவுல வாழ்ந்துடுவோம்.

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

/////அழகர் said...
ப.செல்வக்குமார் said...

நான் இப்ப என்ன பண்ணனும் ?//

ஐயோ சண்டை நடக்குதுன்னு யாரையாவது போய் பஞ்சாயத்துக்கு கூப்புடணும்..இல்லைனா நாய் நக்ஸ் பிரீயாத்தான் இருப்பாரு..போய் கூப்புடு///////

ஒரு உயர் அதிகாரி நான் இங்க இருக்கும் போது இன்னொருத்தரை வெச்சு பஞ்சாயத்தா,... நெவர் நெவர்......

பாரத்... பாரதி... said...

அளவில்லா மகிழ்ச்சி செல்வா.. மேன்மேலும் புகழ் பெற வாழ்த்துகள்..

பாரத்... பாரதி... said...

நீங்க #selvu effectஎபக்ட் என ட்விட்டரில் தனி டிரண்டை அறிமுகப்படுத்திய திறமைசாலி அல்லவா?

அனு said...

ரொம்ப சந்தோஷம், செல்வா.. மேலும் மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகள்!!
உங்கள் வாழ்வில் சீக்கிரமே 2018 வரட்டும்.. :)

இரவு வானம் said...

செல்வா கடந்த புதன்கிழமையே பார்த்தேன், சீக்க்கிரமே மெயின் விகடனில் அறிமுகம் வர என்னுடைய வாழ்த்துக்கள்

வெறும்பய said...

வாழ்த்துக்கள் செல்வா அவர்களே..

மனசாட்சி™ said...
This comment has been removed by the author.
மனசாட்சி™ said...

வாழ்த்துக்கள் செல்வா வாழ்த்துக்கள்

middleclassmadhavi said...

Congratulations!

பாலா said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே

வைகை said...

எங்கள் செல்வாவை அறிமுகப்படுத்தி பெருமை தேடிக்கொண்ட விகடனுக்கு வாழ்த்துக்கள்!

கார்த்திக் said...

Selva,
Super da. Congrats and keep writing well. :)
-- Karthik

வீடு K.S.சுரேஸ்குமார் said...

வாழ்த்துகள் நண்பா!

ஜில்தண்ணி said...

soooper mama :)

awaiting 2 hear isai fm :)

u can da..all d best

ஜில்தண்ணி said...

soooper mama :)

awaiting 2 hear isai fm :)

u can da..all d best

ss said...

வாழ்த்துக்கள் செல்வா..!!! :)

chezhiyan said...

வணக்கம்
நன்றாக எழுதுகின்றீர்கள் ரசிக்கும்படி ,
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....