Friday, February 11, 2011

70 ஆம் வயதில் நான்.!

முன்குறிப்பு : நான் என்னோட 70 வயசுல இருந்து ஒரு பதிவு எழுதினா எப்படி இருக்கும் அப்படின்னு ஒரு கற்பனை. கூடவே இது எப்படி இருந்து அப்படின்னு படிச்சுப் பார்த்துட்டு சொல்லுங்க.!இது ஒரு புதிய முயற்சி. அதான் கேக்குறேன்!

நேரம் மாலை 5 மணி.. தேதி 10.12.2057 :

23 வயசுல ப்ளாக் எழுதுறேன் அப்படின்னு வந்தேன். இப்ப 70 ஆச்சு. என்ன எழுதினேன் என்ன தெரிஞ்சிக்கிட்டேன்னு தெரியல. ஆனா உலகம் முழுக்க நண்பர்கள் இருக்காங்க அப்படின்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு. அதிலும் நிறைய பேர் அடிக்கடி சந்திச்சுப் பேசுறோம் , ஒரு குடும்ப உறுப்பினர்கள் மாதிரி இருக்குறது அதவிட சந்தோசம்.

நான் ப்ளாக் எழுத வந்த போது இருந்த டெக்னாலஜிக்கும் இப்ப இருக்குற டெக்னாலஜிக்கும் எவ்ளோ வேறுபாடு! நினைச்சுப் பார்க்கவே முடியல. அப்பவெல்லாம் கம்பியூடர் கீ போர்ட்ல இருந்து டைப் பண்ணி எழுதினேன். இப்பவெல்லாம் பேசினா அதுவா எழுதி விதவிதமா ஸ்டைல் மாத்தி என்ன என்னவோ பண்ணுது. இன்னும் நாம நினைக்கிறத கூட எழுதுற மாதிரி இப்ப கண்டுபிடிச்சிருக்காங்க. எப்ப விற்பனைக்கு வருதுன்னு தெரியல.

நான் வந்த புதுசுல மொக்கையா தான் எழுதுவேன். என்ன எழுதுரதுனே தெரியாது. ஆனா அதுக்கு ரொம்ப பீல் பண்ணுவேன். நாமளும் நல்லா எழுதணும் எழுதணும் அப்படின்னு நினைப்பேன். ஆனா எது எழுதினாலும் மொக்கயாதான் இருக்கும். ஆனா இப்ப அந்தப் பிரச்சினை இல்லை , மொக்கையா எழுதுறோமே அப்படின்னு எந்த பீலிங்கும் இல்ல. ஏன்னா அது பழகிப்போச்சு?!?

சத்தியமா ப்ளாக் எழுத வரதுக்கு முன்னாடி வேற எந்த ப்ளாக்க்கும் படிச்சது கிடையாது. எந்த ப்ளாக்கரையும் தெரியாது. அப்புறம் அப்படி இப்படி மொக்க போட்டு நிறைய நண்பர்கள் வந்தாங்க. சரி ப்ளாக் பத்தி மட்டுமே சொல்லி என்ன பண்ணுறது. என் வாழ்க்கைல எவ்ளோ மாற்றங்கள் இந்த 47 வருசத்துல என் வாழ்க்கைல எவ்ளோ மாற்றம்.அப்ப இருந்ததுக்கும் இப்ப இருக்குறதுக்கும் எத்தனை விசயங்கள் கடந்து போயிருக்கு. என்னமோ இப்ப ப்ளாக் எழுத வந்ததுமாதிரி இருக்கு.

என்னால இப்பவும் நம்ப முடியல , நான் ரேடியோ ஜாக்கி ஆனது. அப்போ  இருந்த சந்தோசம் சொல்லுறதுக்கு வார்த்தைகளே இல்ல. என்னோட முதல் ப்ரோக்ராம் பண்ணும்போது இருந்த படபடப்பு , ஒரு வேகம் ஐயோ அத இன்னிக்கு நினைச்சாலும் உடம்பு சிலிர்க்குது. அவ்ளோ ஆசை . நான் நினைச்சது மாதிரியே ஒரு பிரபல ரேடியோ ஜாக்கி ஆகிட்டேன். எத்தன நிகழ்சிகள் அதுல எத்தனை வித்தியாசங்கள் எல்லாமே இன்னும் மனசுல இருக்கு.

இன்னும் அந்த வயசுல மறக்க முடியாத சம்பவம் அப்படின்னு பார்த்தா அவ கிட்ட காதல சொன்னதுதான். அவ்ளோ நாளா பயந்துட்டு இருந்துட்டு அந்த ஒருநாள் மட்டும் எப்படி எனக்கு அவ்ளோ தைரியம் வந்ததுனு இன்னும் வியப்பா இருக்கு. அவள பாக்கும்போதெல்லாம் ஒரு படபடப்பு இருந்துச்சு. ஆனா ஒருநாள் நேரா அவளப் பார்த்து காதலிக்கிறேன் அப்படின்னு சொன்னதும் அவ கண்ணுல முகத்துல காட்டின பாவங்கள என்னால இன்னும் மறக்க முடியல. அதுமட்டும் இல்லாம " பரவால்லையே , இப்பவாவது தைரியம் வந்துசே " அப்படின்னு அவ சொன்னது இன்னும் காதுக்குள்ள கேட்டுட்டே இருக்கு.

அப்புறம் கொஞ்சநாள் கழிச்சு அவளப் பத்தி வீட்டுல சொன்னது , எங்க வீட்டுல அவுங்க வீட்டுல எல்லாம் சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணினது எல்லாமே இன்னும் மறக்கமுடியாத நினைவுகள இருக்கு. இது மட்டுமா எங்களோட பொண்ணு பிறந்த போது எவ்ளோ சந்தோசமா இருந்துச்சுனு சொல்லவே முடியல. முதல் முதலா ரேடியோ ஜாக்கி ஆனபோது எந்த மாதிரி பீல் பண்ணினேனோ அதவிட கொஞ்சம் அதிகமாவே சந்தோசப்பட்டேன்னுன்னு சொல்லலாம். இன்னும் அந்த நாட்களை நினைச்சா நேரம் போறதே தெரியல.

அப்புறம் என்னோட நீண்டகால லட்சியம் என்னோட நாற்பதாவது வயசுலத்தான் நிறைவேறுச்சு. அதிக அளவுல நிலங்கள் வாங்கி அதுல சொந்தமா இயற்கை முறைல பயிரிட்டு அதுல விளையுற தானியங்கள எங்க மாவட்டத்துலயும் சுத்தி இருக்குற மாவட்ட ஓரங்களிலும் ரொம்ப சுத்தமான கடைகளை கட்டி உற்பத்தி விலையில் இருந்து ஒரு இரண்டு அல்லது மூணு ரூபாய் மட்டுமே லாபம் வச்சு விக்கணும் அப்படிங்கிறது. நான் ரொம்ப கஷ்டப்பட்டு உருவாக்கின ஒரு விசயம் அப்படின்னா அது இதுதான்.

அப்படி விக்கும்போது அப்போ இருந்த உணவு தானியங்கள் இருந்த விலைல பாதி விலைக்குத்தான் என்னோட கடைல இருந்து வித்தோம். அதுவும் இல்லாம எல்லாமே இயற்கை முறைல இருக்குறதால எல்லோருமே இத விரும்ப ஆரம்பிச்சாங்க. ரொம்ப சீக்கிரமே இது பிரபலம் ஆகிடுச்சு.

அதே மாதிரி பாலிதீன் கவர்ல எந்தப் பொருளுமே தரதில்லை அப்படின்னு சொல்லி அதுக்கு மாற்றுப் பொருள் ஒண்ண கண்டுபிடிக்கறத ஊக்குவிச்சு இப்போ பாலிதீன் அப்படிங்கிற கண்ணாடிப் பைகளே இல்லாமே இருக்குறதுக்கு அதுவும் ஒரு காரணம்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு. ப்ரைவேட் லிமிட்டடா ஆரம்பிச்ச கம்பனி இப்போ பப்ளிக் லிமிட்டடா  மாறிருக்கு. அதுமட்டும் இல்லாம மாற்றம் நம்ம கிட்ட இருந்தே வரணும் அப்படிங்கிற என்னோட கொள்கைய நான் இதுல நிரூபிச்சிருக்கேன்.

என்னோட பையன் பெரிய டென்னிஸ் வீரனா வரணும்னு சொன்னது அது மாதிரியே இப்ப ரொம்ப பெரிய ஆளா இருக்குறது இது எல்லாமே உங்களுக்குத் தெரிஞ்சதுதானே , அதான் அடிக்கடி பதிவுபோட்ட்டுடே இருக்கேனே! அப்புறம் அவனோட கல்யாணம் அப்புறம் பேரன் பிறந்தது இப்படி நிறைய சொல்லலாம். பதிவுதான் பெருசா போய்டும்.!

TBTS பேர்ல ஒரு டிரஸ்ட் ஆரம்பிச்சு அதுல நிறைய நல்லது பண்ணனும்னு நினைச்சேன். ஆனா எல்லோருமே பொருளாதார நிலைல சிறப்பா இருக்கறதால விளையாட்டுப் போட்டிகள் , எதாவது கலை நிகழ்சிகள் மட்டுமே நடத்துறோம். ஆனா இது ரொம்ப சந்தோசமானதும் கூட. எந்த மனுசனும் யாரையும் சார்ந்து இல்லாம தன்னிச்சையா நிக்குறது எவ்ளோ பெரிய விசயம்.! சரி நாளைக்கு திங்கள் கிழமை நான் போய் செல்வா கதைகள் எழுதணும். கிளம்புறேன்!!

எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும் நான் , சௌந்தர் , எஸ்.கே மூணுபேரும் இன்னும் மொக்கை போடுறது நிறுத்தல. அது அப்ப இருந்து அப்படியே போயிட்டே இருக்கு. எவ்ளோதான் பெரிய ஆளா வந்தாலும் நான் இன்னும் அப்படியே இருக்குறது எனக்குப் பிடிச்சிருக்கு. ஏன்னா மொக்கை போல் இனிதாவது எங்கும் காணோம்!!

நீதி : நிகழ்காலத்துக்கு வாங்க!! ஹி ஹி ஹி

ஒரு அறிவிப்பு : அந்த அறிவிப்புக்கு முன்னாடி ஒரு நாலு வரி கவிதை .. ஹி ஹி

தமிழில் உள்ள வார்த்தைகள் அனைத்தும்
சேர்த்து ஒரு கவிதை செய்தேன்
ஏதோ குறைந்தது போல் இருந்தது
உன்பெயரை எழுதியதும் நிறைவானது!!

தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் அந்த நான்கு
எழுத்துக்கள் மீது பொறாமை கொண்டன
உன்பெயரை அலங்கரிப்பதால்!!
அந்த நான்கு எழுத்துக்கள் ர்ந்தசௌ!

கொஞ்சம் ஓவரா இருக்குல .. ஹி ஹி .. அதுவும் அவன பத்தி சொல்லுறதுக்கு இந்தக் கவிதை எல்லாம் ஓவர்தான்.. சரி விடுங்க .. அவனுக்கு நாளைக்குப் பிறந்தநாள். அதனால அவன ரொம்ப சந்தோசமாகவும் , மகிழ்ச்சியாவும் அவன வாழ்க்கை அமையனும் அப்படின்னு இறைவனை வேண்டி அமர்கிறேன்!!

பின்குறிப்பு : இந்தப் பதிவ தொடர் பதிவா எழுதலாம் அப்படின்னு ஒரு ஆசை. அதனால நான் வெறும்பய அண்ணனையும் சுற்றுலாவிரும்பி அருணையும் அழைக்கிறேன்!

60 comments:

Arun Prasath said...

vadai

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

2nd vadai

வைகை said...

3rd vadai

வைகை said...

4th also me

சக்தி கல்வி மையம் said...

நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....

Unknown said...

mee the first
vadai enakuthan sontham..

nan tharamaten..

வைகை said...

நேரம் மாலை 5 மணி.. தேதி 10.12.2057////////////


எலேய் அது 2057 - ஆ.............இல்ல 2017 -ஆ ?

வைகை said...

அப்புறம் என்னோட நீண்டகால லட்சியம்//
அஞ்சு மீட்டர் நீளம் இருக்குமா?

Unknown said...

சான்சே இல்லைனா
நிசமா நல்ல இருந்தச்சு
ரொம்ப திங்கிங்
தெளிவான தொலைநோக்கு பார்வை
எவ்ளோ அருமையான எண்ணங்கள்
யோசனைகள்

ரேடியோ ஜாக்கி ஆனால்
எனக்குத்தான் அந்த உங்க அச்சிடன்ட் போஸ்ட்

நல்ல இருக்குன
வாழ்த்துக்கள்

Speed Master said...

ஆசைகள் அணைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள்

கணவு மெய்பட கடின பட்டு உழைக்கவும்

வைகை said...

அது மாதிரியே இப்ப ரொம்ப பெரிய ஆளா இருக்குறது இது எல்லாமே உங்களுக்குத் தெரிஞ்சதுதானே ///

ஒனக்கு எழுவது வயசுனா உன் பையன் பெரியாளாத்தான் இருப்பான்?

ஜெயந்த் கிருஷ்ணா said...

அட நல்லாயிருக்கே..

யாருமே தொடர் பதிவா எழுதலன்னாலும் நான் எழுதுறேன் செல்வா...

Unknown said...

உங்க லவ் சொன்ன விதம்
அருமை ...:)

ஜெயந்த் கிருஷ்ணா said...

உனது ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள் செல்வா...

இறக்கும் காலம் வரை இணைபிரியாமல் இருக்கட்டும் நமது இணைய உறவுகள்..

வைகை said...

மகிழ்ச்சியாவும் அவன வாழ்க்கை அமையனும் அப்படின்னு இறைவனை வேண்டி அமர்கிறேன்!! ///


அப்ப இவ்ளோ நேரம் நின்னுகிட்டா எழுதின?

logu.. said...

\\70 ஆம் வயதில் நான்.!\\

Asku busku ..

Rombathan aasai.

ஜெயந்த் கிருஷ்ணா said...

செல்வா உன்னோட மொக்கை மண்டைக்குள்ள இப்படி ஒரு கற்பனை சக்த்தியா... ரொம்ப நல்லாயிருக்குப்பா..

வைகை said...

வெறும்பய said...
அட நல்லாயிருக்கே..

யாருமே தொடர் பதிவா எழுதலன்னாலும் நான் எழுதுறேன் செல்வா..//


எழுத சரக்கு கிடைக்கவும் சந்தோசமோ?

Speed Master said...

170 ஆம் வயதில் நான் இது கரெக்டா இருக்கும்னு தோனுது

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தருக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்./.

மாணவன் said...

நல்லாருக்கு செல்வா... :))

Arun Prasath said...

" பரவால்லையே , இப்பவாவது தைரியம் வந்துசே " அப்படின்னு அவ சொன்னது இன்னும் காதுக்குள்ள கேட்டுட்டே இருக்கு.//

இது எப்போ நடக்க போகுது?

Arun Prasath said...

இது மட்டுமா எங்களோட பொண்ணு பிறந்த போது எவ்ளோ சந்தோசமா இருந்துச்சுனு சொல்லவே முடியல//

சொல்ல வேணாம் எழுதி காமி

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

வெறும்பய said...
அட நல்லாயிருக்கே..

யாருமே தொடர் பதிவா எழுதலன்னாலும் நான் எழுதுறேன் செல்வா..//


எழுத சரக்கு கிடைக்கவும் சந்தோசமோ?

//

என்ன மாம்ஸ் சொல்ற... இருக்காதா பின்ன..

மாணவன் said...

// வெறும்பய said...
அட நல்லாயிருக்கே..

யாருமே தொடர் பதிவா எழுதலன்னாலும் நான் எழுதுறேன் செல்வா...//

தொடர்பதிவேது எழுதுன உன்னய கொண்டே புடுவேன்.....ஹிஹி

NaSo said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சௌந்தர்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எல்லாம் அருமை..
கண்டிப்பாக பின்வரும் காலத்தில் இவ்வளவு மாற்றங்கள் சாதாரணமானதாகிவிடும்..

தொடர்ந்து வரும் கவிதை அருமை

அது... சரி அப்போது வடை இருக்குமா?
அதை நீங்கள் வாங்க முயற்ச்சிப்பீர்களா

மாணவன் said...

செளந்தருக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

Madhavan Srinivasagopalan said...

உள்மனதில் இருக்கும் ஆசையை சொல்லி இருக்கிறீர்கள்..
அனைத்தும் மிகவும் நல்லா ஆசைகளே! அவைகள் உங்கள் வாழ்வில் கண்டிப்பாக நிறைவேற ஆண்டவனை வேண்டுகிறேன்.

எஸ்.கே said...

சௌந்தருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

எஸ்.கே said...

வித்தியாசமான சிந்தனை செல்வா! வாழ்த்துக்கள்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழ்க இந்தியா வாழ்க அபிநயா

Unknown said...

70 வயசுலேயும் மொக்கை தானா. அப்பகூட உருப்புடியா ஒரு போஸ்ட் போட மாட்டீங்களா

சி.பி.செந்தில்குமார் said...

haa haa ஹா ஹா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடப்பாவி...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்போ ரேடியோ ஜாக்கியாக போற, அப்போ 70 வயசுல ரேடியோ டேசன் ஓனராக வேணாமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல விஷயங்களை சொல்லியிருக்கே< இதெல்லாம் வெறும் கற்பனையாக இல்லாம நெஜமாவும் நடக்கட்டும்.

சௌந்தர் said...

என்ன மச்சி sss ரோடியோ ஸ்டேஷன் எங்க காணோம்

காதல சொன்னதுதான். அவ்ளோ நாளா பயந்துட்டு இருந்துட்டு அந்த ஒருநாள் மட்டும் எப்படி எனக்கு அவ்ளோ தைரியம் வந்ததுனு இன்னும் வியப்பா இருக்கு.///

மச்சி அன்னைக்கு நான் உன் கூட இருந்தேன் டா....அதான் உனக்கு பிகர் செட் ஆனா வுடன் என்னை விட்டுட்டு போயிட்டியே

மச்சி இந்த பதிவை படிக்கும் போது உன் தன்னம்பிக்கை தெரியுது டா சூப்பர் ஆனா அப்போ கூட நீ மொக்கை போடுவியா ......இதுல நானும் மொக்கை போடுறேன் சொல்றே ....

சௌந்தர் said...

கொஞ்சம் ஓவரா இருக்குல .. ஹி ஹி .. அதுவும் அவன பத்தி சொல்லுறதுக்கு இந்தக் கவிதை எல்லாம் ஓவர்தான்.. சரி விடுங்க///

ஆமா மச்சி எத்தனை ஓவர் போட்டே ....ஹி ஹி ஹி உன் கவிதை சூப்பர் டா தேங்க்ஸ் மை டியர்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இது தொடர்பதிவா... அட்ங்கொன்னியா.... கெளம்பிட்டாய்ங்களா மறுபடி....?

Praveenkumar said...

ஹெ...ஹே.. சூப்பரப்பு..!!! அதுவும் கடைசியல சௌந்தருக்கு போட்ட கவிதை ஹா..ஹா..ஹா.. செம கலக்கல் மக்கா..!!

Praveenkumar said...

100வயதில் இதே போன்னு நீயும் சௌந்தரும் பதிவுளை எழுதி தங்களது சேவையை தொடர வாழ்த்துகள்... மக்காஸ்!!

சௌந்தர் said...

@@வெறும்பய
@@நாகராஜசோழன் MA
@@மாணவன்
@@எஸ்.கே......

ரொம்ப ரொம்ப நன்றி நண்பா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அட, என்னமா கவிதை எழுதறான் செல்வா.... வாழ்த்துக்கள் சௌந்தர்...

MANO நாஞ்சில் மனோ said...

எல்லா ஜாம்பவான்களும் வந்தாச்சா அப்போ நான்தான் கடைசியா அவ்வ்வ்வவ்வ்வ்வ்......

MANO நாஞ்சில் மனோ said...

நலம் சுகம் வளம் பெற்று வாழ இந்த அண்ணனின் வாழ்த்துக்கள்....
நல்லா இருடே மக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

//எழுத சரக்கு கிடைக்கவும் சந்தோசமோ?//

என்னது சரக்கா....................
அப்போ நானும் நானும் ஹே ஹே ஹே...

இம்சைஅரசன் பாபு.. said...

//இந்தப் பதிவ தொடர் பதிவா எழுதலாம் அப்படின்னு ஒரு ஆசை. அதனால நான் //

தக்காளி கொஞ்ச நாள் ஓஞ்சு இருந்து ...திரும்பவும் ஆரம்பிச்சுட்டான் ரயில் வண்டி விட ......இருடி இருக்கு ஒரு நாள்

இம்சைஅரசன் பாபு.. said...

// மகிழ்ச்சியாவும் அவன வாழ்க்கை அமையனும் அப்படின்னு இறைவனை வேண்டி அமர்கிறேன்!! //

அன்பு தம்பி செல்வா வுடன் சேர்ந்து .நானும் இறைவனிடம் இறைஞ்சுகிறேன் (ச்சே இதுக்கு தேவா அண்ணா ப்ளாக் படிக்க கூடாது _பிராத்திக்கிறேன் .......

இம்சைஅரசன் பாபு.. said...

௫௦ வடை எனக்கு

இம்சைஅரசன் பாபு.. said...

//23 வயசுல ப்ளாக் எழுதுறேன் அப்படின்னு வந்தேன். இப்ப 70 ஆச்சு. என்ன எழுதினேன் என்ன தெரிஞ்சிக்கிட்டேன்னு தெரியல. ஆனா உலகம் முழுக்க நண்பர்கள் இருக்காங்க //

இப்படி பொய் சொன்ன அண்ணனுக்கு பிடிக்காது ....உன் மொக்கைய படிச்சு எதனை பேர் அப்பவே செத்து போயிட்டான்னு எனக்கும் சில பேருக்கும் மட்டுமே தெரியும்

Chitra said...

HAPPY BIRTHDAY, SOUNDHAR!

ம.தி.சுதா said...

எல்லாரும் 50 லும் ஆசை வரும் என்பாங்க இந்த 70 வயசு கிழவனுக்கு வந்த ஆசையை பாரு...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா

ரொம்ப நல்லா எழுதி இருக்கடா சொல்வா. கவிதை அருமை. இப்படி எல்லாம் பாராட்டனும் ஆசையா தான் இருக்கு. ஆனா நான் இப்படி எல்லம் பேசினா இங்க இருக்க சில துரோகிங்க என்னை போட்டு தள்ளிடும். அதனால நான் வழக்கபடி சாட்ல உன்னை பாராட்டரேன்... :)

வினோ said...

சௌந்தருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

செல்வா நல்லா தான் யோசிக்கிற...

Unknown said...

2057லும் இப்படியே இருக்க வாழ்த்துக்கள்.

சௌந்தருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

cheena (சீனா) said...

அன்பின் செல்வா

இலட்சியங்கள் நிறைவேற - நல்வாழ்த்துகள் - சௌந்தருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

ஜில்தண்ணி said...

விட்டா ஆவியா வந்து கூட பதிவு போடுவ போல :)

டேய் ஒனக்கு ஆபீசுல வேலை இல்லன்னா இப்டியெல்லாமா தோணும் :)

Unknown said...

//பின்குறிப்பு : செல்வா கதைகள் வருவதால் திங்கள் கிழமை என்பது கொண்டாடப் படவேண்டிய ஒன்று.!//
செவ்வாய்க்கிழமை என்ன சொல்வீங்க செல்வா ?

J.P Josephine Baba said...

நல்ல கனவுகள்! வாழ்த்துக்கள் செல்வா!