Wednesday, February 2, 2011

ஆன்மா! ( தேவா ஸ்டைல் )

முன்குறிப்பு : இந்தப் பதிவுல சொல்லப்பட்டிருக்கிற விசயங்கள் எல்லாமே ஆன்மா , கடவுள் என்னோட புரிதல்கள் மட்டுமே. அது உங்களோட புரிதல்கள் கருத்துக்களுடன் மாறலாம்.

ஆன்மா , ஆன்மீகம், கடவுள் இதுபற்றி சிந்திக்கும்போது எப்பொழுதுமே குழப்பம் தான் மிஞ்சுது.ஆன்மாவை உணரனும் அதாவது நமது மனம் உடல் சார்ந்த விசயங்களைத் தாண்டி வாழ்வின் ஆதாரம் என்று சொல்லப்படுகின்ற , நம்பப்படுகின்ற ஒரு விசயத்தினை உணரனும்னு சிலசமயங்களில் நினைச்சாலும் பல சமயங்களில் வேண்டாம் அப்படின்னே தோணுது.

 ஆன்மா என்ற ஒன்றுக்கு உங்களோட மனம் பற்றியோ , உடல் பற்றியோ தெரியாது இங்கே மனம் பற்றி ஆன்மாவுக்குத் தெரியாது, அதாவது கவலை இல்லை  அப்படிங்கிற கூற்று உங்களுக்கு குழப்பத்தைத் தரலாம். மனம் அப்படிங்கிற விசயம் எப்பொழுதுமே இந்த வாழ்க்கை நிலையானது , இங்கே சாதிக்கணும் , நிறைய சொத்துக்கள் சேர்த்துக்கனும்னு  நினைக்கக்கூடியது. ஆனா ஆன்மாங்கிறது இந்த வாழ்க்கை போலியானது , அதாவது இப்ப இந்த உடலுள குடிகொண்டுள்ளோம் , காலம் மாறும்போது ஒரு எறும்போட உடலிலும் குடிகொள்ள வேண்டி இருக்கலாம்னு நினைக்கக்கூடியது.

   இதிலிருந்து ஆன்மாவை உணர்வதின் பயன்கள் , நான் ஏன் அத உணரவேண்டாம்னு சொல்லுறேன்னு பார்க்கலாம். ஆன்மாங்கிற விசயத்தைப் பல பேர் பலவிதமா சொல்லுறாங்க. பொதுவா உயிர்தான் ஆன்மா அப்படிங்கிற எண்ணமும் இருக்கு. ஆன்மாவை உணர்வது அப்படிங்கிறது இப்ப நம்ம இருக்குற இந்த உடல் நிலையற்றது. அதனால் வரும் இன்பதுன்பங்களும் நிலையற்றது. நாளைக்கு ஒரு கார் வந்து மோதினாலோ , இல்ல ஒரு நோய் வந்தாலோ இந்த வீட்டிலிருந்து போய்டுவோம். இந்த வாழ்க்கை , பணம் , புகழ் எல்லாமே போலியான ஒண்ணு அப்படின்னு நினைக்கும் போது பெரும்பாலும் ஆன்மா அப்படிங்கிற விசயத்தைப் புரிஞ்சிக்கிறோம்னு நினைக்கிறேன்.

  சரி ஆன்மாவை உணர்வதன் பயன்கள் என்ன ? ஆன்மாவ உணர்ந்தவர் நிச்சயமா எதுக்கும் ஆசைப்படாதவராகத்தான் இருப்பார் அப்படின்னு நினைக்கிறேன். அதே சமயம் எதுக்கும் கோபமோ , இல்ல சந்தோசமோ படமாட்டார். அதாவது பற்று இன்றி இருப்பார். அப்படின்னா சாமியாரா அப்படின்னு கேக்காதீங்க. சாமியார் அப்படிங்கிற நிலை கூட ஆன்மாவை உணர்ந்த நிலைன்னு சொல்லிட முடியாது.

  அதாவது யார் ஒருவர் எந்தவித ஆசையும் இல்லாம , கோபமும் இல்லாம , அதே சமயம் அவரோட வேலைகளை சரியாக செய்துட்டே இருப்பார். அதாவது அவரது வேலைகளில் இருந்து பின்வாங்க மாட்டார். அதே சமயம் எதையும் எதிர்பார்க்கவும் மாட்டார். இப்ப அவர்கிட்ட இருந்து நீங்க ஒரு பத்தாயிரம் ஏமாத்தினா கூட கண்டுக்காம விட்டுடுவார்னு சொல்லுறேன். ஆனா அப்படி இருக்குறவங்கள லூசு அப்படின்னு சொல்லுறோம் , நாம லூசு அப்படின்னு சொன்னா கூட அவருக்கு கோபம் வராது.

  அதே மாதிரி ஆன்மாவை உணர்ந்தவங்க கண்டிப்பா சந்தோசமோ , இல்ல துக்கமோ படமாட்டங்க.சந்தோசத்துக்கும் துக்கத்துக்கும் அப்பாற்பட்டவர்தானே ஆன்மாவை உணர்ந்தவரா இருக்க முடியும். அதாவது பாசத்துக்கும் கட்டுப்பட்டவரா இருக்க மாட்டாங்க. ஏன்னா அம்மா , அப்பா போன்ற உறவுகள் இந்த உடலுக்கு மட்டும்தானே , ஆன்மாவுக்கு கிடையாதுல. அப்படின்னா யோசிச்சு பாருங்க , எந்த வித உணர்வுமே இல்லாம , சந்தோசத்துல சிரிக்காம , துக்கத்துல அழாம ஒரு கல்லு மாதிரி அதாவது ஒரு ஒருவரால வாழ முடியுமா ?

  எந்த வித உணர்வுமே இல்லாம வாழ்வதற்கா இவ்ளோ போராட்டம் ? அப்படின்னா ஆன்மாவை உணர்வது நன்மை இல்லையா அப்படின்னு நீங்க நினைக்கலாம். உண்மைலேயே நன்மை தீமை , நல்லவன் , கெட்டவன் இப்படி எல்லா விசயங்களையும் தாண்டின ஒண்ணுதான் ஆன்மாவை உணர்வது. அப்படின்னா வாழ்கைய வெறுக்கறதா அப்படின்னு கேக்கலாம். கண்டிப்பா வெறுப்பது கிடையாது. வெறுப்பு வேற உணர்வது வேறு. உங்களுக்கு ஒரு விசயம் பிடிக்கலைனா அது வெறுப்பது. ஆனா ஒரு விசயத்த உங்களுக்கு பிடிக்கவும் இல்ல , அதே சமயம் வெறுப்பும் வரல அப்படிங்கிறது நடுநிலைமை. ஆனா இந்த இரண்டுமே இல்லாம ஒரு விசயத்த விரும்பாம அதே சமயம் வெறுக்காமையும் செய்யுறதுன்னு சொல்லலாம்.

  உண்மைலேயே இந்த நிலைல நிச்சயமா வெளியில இருந்து பார்க்கும்போது எந்தவித சந்தோசமும் இல்லாம தெரியலாம். ஆனா சந்தோசம் , துன்பம் அப்படிங்கிற நிலையை தாண்டின பிறகு எதுக்கு சந்தோசப்படனும். ஆனா இந்த நிலையில் நம்மால வாழ்கைய ரசிக்க முடியாது. அதாவது சிரிக்க வேண்டிய நிலைல சிரிக்காம, அழவேண்டிய நிலைல அழாம எதுக்கு வாழனும் ? ஆனா இது எல்லாமே போலியான ஒண்ணுதான். இருந்தாலும் கூட வாழுரதுக்குனு வந்த பிறகு ஏன் அத விட்டுட்டு வேற நிலைக்குப் போகணும்னுதான் எனக்கு குழப்பமா இருக்கு.

  அப்படின்னா மேல சொன்னது மாதிரி ஆன்மாவை உணர்வது நிச்சயமா ஒரு தவறான ஒரு பாதையைத்தான் காட்டும். அதாவது இந்த உலகம் கண்டிப்பா நிலையானது இல்ல , அப்புறம் எதுக்கு இவ்ளோ முயற்சி செய்யனும் , சிரமப்பட்டு முன்னேறனும் அப்படிங்கிற மாதிரி எதிர் விளைவுகளையும் கொடுக்கும் தானே?

  ஆன்மாவை உணர்வது அப்படிங்கிற விசயத்தை விட நாம பொதுவாவே நமக்கு பிடிச்ச மாதிரி அடுத்தவங்கள எதுக்காகவும் காயப்படுத்தாம , எப்போதுமே சந்தோசமா அதாவது முடிஞ்ச அளவு சந்தோசமா இருந்தாலே வாழ்க்கை நமக்கு பெரிய வரமா அமையும். அதே மாதிரி தியானம் பற்றி பேசிட்டிருக்கும்போது மனிதன் தியானம் பண்ணுறது கூட கடவுளை அடையும் வழி அப்படின்னு சொன்னாங்க. ஆனா உண்மைலேயே கடவுளை அடையணும்னா வாழ்க்கை மீது ஒரு பிடிப்பு இல்லாம அதாவது இத விரும்பாம இருந்தாதானே அது நடக்கும்.

  தியானம் பண்ணுறது மனதினை அடக்கனும்னு சொல்லுறாங்க , ஆனா மனதினை அடக்கி ஒரு அமைதி வரதுக்கும் மனதினை அதான் போக்கிலேயே விட்டு ஒரு அமைதி வரதுக்கும் வித்தியாசம் இருக்குதுன்னு நினைக்கிறேன், கண்டிப்பா மனதினை அடக்குவதைக் காட்டிலும் அதை அதான் போக்கிலேயே அதாவது அது எவ்ளோ சிந்திக்குது அப்படின்னு விட்டாதானே நம்மால தாண்டிப் போக முடியும் . அது இல்லாம மனச அடக்குறோம் அப்படின்னு சொல்லிட்டு ஒரு வழிய தியானம் பண்ணி அடக்கினாலும் கூட அது இந்த வாழ்கை நிலையானது அப்படிங்கிற ஒரு போலியான விசயத்த உண்மைன்னு நம்புறது மாதிரி தானே.!

  மொத்தத்துல கடவுள நம்புறவங்க நம்புங்க , நம்பாதவங்க நம்ப வேண்டாம். ஆனா கண்டிப்பா ஆன்மாவையோ கடவுளையோ உங்களை தவிர உங்களுக்கு வேற யாராலையும் காட்டிவிட முடியாது. பொதுவா வாழ்வதற்குத் தான் வந்திருக்கோம். சந்தோசமா வாழ்வோம் . அடுத்தவங்களப் பத்தி சிந்திக்கரத விட்டாவே ரொம்ப சந்தோசமா வாழ முடியும். அதே மாதிரி சந்தோசமா வாழனும்னா நீங்க படிச்ச படிப்பு , புகழ் , எல்லாத்தையும் எப்பவுமே எல்லோர்கிட்டவும் காட்டாதீங்க. இதெல்லாம் தூக்கி வீசிடுங்க , எப்ப தேவைப்படுதோ அப்ப மட்டும் காட்டுங்க , அப்பத்தான் மகிழ்ச்சியா இருக்கமுடியும் அப்படிங்கிறது என்னோட கருத்து. மத்த படி ஆன்மா அதான் போக்கிலேயே இருக்கட்டுமே!!

நீதி : மொக்கை போல் இனிதாவது எங்கும் காணோம்!

பின்குறிப்பு : நிறைய சொல்லனும்னு தோணுது , ஆனா வார்த்தைதான் இல்லை. இங்க சொன்னது எல்லாமே என்னோட புரிதல்கள் மட்டுமே அதுல தவறுகள் இருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்க.

63 comments:

karthikkumar said...

படிச்சிட்டு வரேன்

சௌந்தர் said...

ஆன்மா////

யாரோடா ஆன்மா.......குறிப்பு இன்னும் பதிவை படிக்க வில்லை

Unknown said...

ஸ்ஸ்ஸ்ஸ...ப்பா!

சௌந்தர் said...

அதே சமயம் எதையும் எதிர்பார்க்கவும் மாட்டார். இப்ப அவர்கிட்ட இருந்து நீங்க ஒரு பத்தாயிரம் ஏமாத்தினா கூட கண்டுக்காம விட்டுடுவார்னு சொல்லுறேன்./////

மச்சி ஒரு பத்தாயிரம் தாயேன்

Speed Master said...

வழக்கம் போல் ஒன்னும் புரியவில்லை

சிறப்பான பதிவு
நன்றி
வாழ்த்துக்கள்

வேற என்ன சொல்ல

Unknown said...

தெரியாம படிச்சுட்டேன்! மண்டை காய்ஞ்சிருச்சு! :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

karthikkumar said...

படிச்சிட்டு வரேன்///

உயிரோட வருவியா மச்சி

Anonymous said...

aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaannnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

Anonymous said...

pey kathainu ninaishen

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆதாரம் என்று சொல்லப்படுகின்ற//

நம்ம மாணவன் முதல் தாரம் ரெண்டாம் தாரம் வச்சிருக்கார் தெரியும் அதென்ன ஆதாரம்?

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
karthikkumar said...

படிச்சிட்டு வரேன்///

உயிரோட வருவியா மச்சி///

U ARE A GENIOUS MR. RAMESH கொன்னுட்டான் பயபுள்ள ஹி ஹி ....A

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஜீ... said...

தெரியாம படிச்சுட்டேன்! மண்டை காய்ஞ்சிருச்சு! :-)//

இன்னுமா உயிரோட இருக்கீங்க ஹிஹி

karthikkumar said...

நீதி : மொக்கை போல் இனிதாவது எங்கும் காணோம்!///

அப்போ இந்த பதிவு மொக்கையா இல்ல படிக்கிற நாங்க மொக்கையா :)

karthikkumar said...

@ ரமேஷ்
நீங்க பதிவ படிக்காம கமென்ட் போட்டு வெளையாடிட்டு இருக்கீங்க. இது நல்லதில்ல .... :)

Unknown said...

இருந்தாலும் ஒரு தலைசிறந்த மொக்கைக்கான மெனக்கெடல், அர்ப்பணிப்பு பதிவில தெரியுது! ஒரு எலக்கியவாதி 'டச்' இருக்கு!

Speed Master said...

உண்னை ஈரோட்டில் பார்க்கும் போதே
விரலை வெட்டிருக்கனும்

தப்புபன்னீட்டேன்

எஸ்.கே said...

மனிதன் எப்போதுமே excite-ஆக உணர்வுள்ளவன். சந்தோசம், சோகம், இன்பம் துன்பம் எல்லாவற்றிலும் அதிகப்படியாகவே உணர்வுகளை காண்பிப்பவன். இது பல சமயங்களில் பிரச்சினையாகிவிடும். குறிப்பாக துன்பங்களை அதிகமாக உணரும்போது. ஆன்மாவை உணர்ந்தவனுக்கு அந்த கிளர்ச்சியான நிலை இல்லாமல் சமநிலையில் இருப்பான்.

சௌந்தர் said...

karthikkumar said...
@ ரமேஷ்
நீங்க பதிவ படிக்காம கமென்ட் போட்டு வெளையாடிட்டு இருக்கீங்க. இது நல்லதில்ல .... :)///

மச்சி அவர் எந்த போஸ்ட் தான் படித்தார் இதை படிக்க போறார் நீ வேற

Saravanan Trichy said...

அற்புதமான விளக்கங்கள் செல்வா. எனக்கும் நெடுநாள் சந்தேகங்கள் எழுந்ததுண்டு. ஆன்மா பற்றிய கேள்விகளை அடுக்கி வைத்து கொண்டே போனாலும் நன்மை தீமையின் விகிதாச்சாரங்கள் அந்த கேள்விகளை பொய்த்து போகச் செய்யும் பொது ஏற்படும் மன நெருடல்களின் ஊடே வாழ்கையின் பயணத்தை தொடர்வது என்பதே மிக வருத்தத்தையும் சோகத்தையும் தர கூடிய காரியமாக இருந்தாலும் கூட கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு எல்லாவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலின் தாக்கத்தால் புரிதலுக்காக சிலமணிநேரம் செலவு செய்ய தோன்றினாலும் என்ன சொல்வது என விளங்காத்தின் அர்த்தத்திலேயே பித்து பிடித்து அலைகிறேன். !!!!!!!!!!!! :P

எஸ்.கே said...

“We are not human beings on a spiritual journey. We are spiritual beings on a human journey.”
- Stephen R. Covey

மாணவன் said...

படிச்சிட்டு வரேன்

மாணவன் said...

வழக்கம் போல் ஒன்னும் புரியவில்லை

சிறப்பான பதிவு
நன்றி
வாழ்த்துக்கள்

வேற என்ன சொல்ல
he he he

மாணவன் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா
ஆதாரம் என்று சொல்லப்படுகின்ற//

நம்ம மாணவன் முதல் தாரம் ரெண்டாம் தாரம் வச்சிருக்கார் தெரியும் அதென்ன ஆதாரம்?//

mobila irukkeen...varen..

செல்வா said...

நான் உள்ள வரலாம்களா ?

Speed Master said...

//கோமாளி செல்வா said...
நான் உள்ள வரலாம்களா ?

இது உன்பிளாக்குயா

MANO நாஞ்சில் மனோ said...

"ங்கே" ஒன்னுமே புரியலை.....

செல்வா said...

//இது உன்பிளாக்குயா //

இது என்னோட ப்ளாக்கா ?

Speed Master said...

//MANO நாஞ்சில் மனோ
"ங்கே" ஒன்னுமே புரியலை.....

எங்களுக்கு மட்டும்

Speed Master said...

// கோமாளி செல்வா said...
//இது உன்பிளாக்குயா //

இது என்னோட ப்ளாக்கா ?

ஸ்ஸ் இப்பவே கண்ண கட்டுதே

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது இந்த பதிவை படிச்சவங்க யாரையும் காணோமா ஆத்தீ நான் எஸ்கேப்பூ.....

சௌந்தர் said...

கோமாளி செல்வா said...
நான் உள்ள வரலாம்களா ?///

ஆமா நீ யாரு....? இங்க என்ன வேலை

எஸ்.கே said...

செல்வா நீங்க இப்போ என்ன நிலைல இருக்கீங்க?

spritual state?
Solid state?

MANO நாஞ்சில் மனோ said...

//வழக்கம் போல் ஒன்னும் புரியவில்லை

சிறப்பான பதிவு
நன்றி
வாழ்த்துக்கள்

வேற என்ன சொல்ல//


நாசமா போச்சு போ......
நீங்களும் "ங்கே"வா......

MANO நாஞ்சில் மனோ said...

//அப்போ இந்த பதிவு மொக்கையா இல்ல படிக்கிற நாங்க மொக்கையா :)//

அதை நீங்களே சாய்ஸ் பண்ணிக்கோங்க பாஸ்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அதே மாதிரி ஆன்மாவை உணர்ந்தவங்க கண்டிப்பா சந்தோசமோ , இல்ல துக்கமோ படமாட்டங்க///////

இது சாத்தியமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சாதாரண மனிதர்களால் உணரப்பட முடியாத ஆன்மா ஏன் இருக்க வேண்டும், அதை தெரிந்து கொள்ளாததால் என்ன பிரச்சனை?

செல்வா said...

/சாதாரண மனிதர்களால் உணரப்பட முடியாத ஆன்மா ஏன் இருக்க வேண்டும், அதை தெரிந்து கொள்ளாததால் என்ன பிரச்சனை? //

அதையே தான் அண்ணா நானும் சொல்லுறேன் .. உணர்வதோ உணரவில்லையோ .. அது ஒரு இடத்தில் இருக்கட்டும் .. கடவுள் போல .. நம்புறவங்க நம்பட்டும் ., உணருரவங்க உணரட்டும் .. நாம வாழ வந்தோம் . சந்தோசமா வாழலாம் அப்படின்னு சொல்லுறேன் ..எனக்கு தெரிஞ்ச அளவுக்கு .

Unknown said...

சூப்பர்..
வாழ்த்துக்கள்..
அருமை நண்பா..
கலக்குங்க..
எப்படி சார் இப்படி?..
ஸ்ஸ்ஸ்ஸ...ப்பா!
ஒன்னும் புரியவில்லை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// கோமாளி செல்வா said...
/சாதாரண மனிதர்களால் உணரப்பட முடியாத ஆன்மா ஏன் இருக்க வேண்டும், அதை தெரிந்து கொள்ளாததால் என்ன பிரச்சனை? //

அதையே தான் அண்ணா நானும் சொல்லுறேன் .. உணர்வதோ உணரவில்லையோ .. அது ஒரு இடத்தில் இருக்கட்டும் .. கடவுள் போல .. நம்புறவங்க நம்பட்டும் ., உணருரவங்க உணரட்டும் .. நாம வாழ வந்தோம் . சந்தோசமா வாழலாம் அப்படின்னு சொல்லுறேன் ..எனக்கு தெரிஞ்ச அளவுக்கு .///////

ஆங்...... இப்பத்தான் படிச்சு முடிச்சேன்... !

இம்சைஅரசன் பாபு.. said...

செல்வா உனக்கு காத்து கருப்பு அடிச்சிட்டா ....

இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா பாதிக்கு மேல பச்சா கண்ணுல இருந்து தண்ணியா வருது ஏன் .....

இம்சைஅரசன் பாபு.. said...

கோவம் ஏதாவது இருந்தா .....போன் போட்டு திட்டு வாங்கிக்குறேன் இப்படி பழி வாங்காதே .....

MoonramKonam Magazine Group said...

ஆழமான கருத்துக்கள் கொண்ட பதிவு!

வைகை said...

அதே மாதிரி சந்தோசமா வாழனும்னா நீங்க படிச்ச படிப்பு , புகழ் , எல்லாத்தையும் எப்பவுமே எல்லோர்கிட்டவும் காட்டாதீங்க.////

அப்ப இந்த பதிவ ஏன் எங்ககிட்ட காட்ற செல்வா?

வைகை said...

இம்சைஅரசன் பாபு.. said...
மக்கா பாதிக்கு மேல பச்சா கண்ணுல இருந்து தண்ணியா வருது ஏன் ....///


அது என்ன பச்சா? ஓஒ....படிச்சாவா?!!!

பாரு செல்வா...உன் பதிவ படிச்சு நம்ம பாபு எப்பிடி ஆயிட்டாருன்னு?!

Unknown said...

ஆன்மா , ஆன்மீகம், கடவுள் இதுபற்றி சிந்திக்கும்போது எப்பொழுதுமே குழப்பம் தான் மிஞ்சுது..

Unga பதிவை படித்தாலும் எப்பொழுதுமே குழப்பம் தான் மிஞ்சுது

Chitra said...

தேவா ........ நண்பேன்டா.....!!!

Praveenkumar said...

தம்பி செல்வா உண்மையில் மிக பிரமாதமாக சொல்லியிருக்கப்பா...
செல்வாவுக்கு மொக்கைதான் தெரியும்னு நெனக்கிறவங்களுக்கு... மொக்கையனுக்குள்ள ஒரு மகானே உட்கார்ந்து இருக்காருனு புரிய வைச்சிருக்கப்பா..... (ஹா... ஹா... சிரிங்கப்பா... நானும் எவ்வளவோ நேரம்தான் சீரியஸாவே கருத்து சொல்லுறது.... ஹி..ஹி...)

Praveenkumar said...

வடை கிடைச்சிருக்கு...!!!

Praveenkumar said...

செல்வா உன்னுடைய புரிதல்கள் மிகவும் தெளிவாக குழுப்புவதாகவே உள்ளது... ஹி..ஹி.. இதுபோல் நிறைய குழப்ப வாழ்த்துகள் செல்வா.

Madhavan Srinivasagopalan said...

எலேய். யாருடா அது.. எங்க தம்பி செல்வா வோட பிலாக ஹேக் பண்ணி இப்படிலாம் பதிவு போடுறது ?

Unknown said...

அவரு ஒரு ஆளு போதுமே தம்பி ...

middleclassmadhavi said...

//அடுத்தவங்களப் பத்தி சிந்திக்கரத விட்டாவே ரொம்ப சந்தோசமா வாழ முடியும். அதே மாதிரி சந்தோசமா வாழனும்னா நீங்க படிச்ச படிப்பு , புகழ் , எல்லாத்தையும் எப்பவுமே எல்லோர்கிட்டவும் காட்டாதீங்க. இதெல்லாம் தூக்கி வீசிடுங்க , எப்ப தேவைப்படுதோ அப்ப மட்டும் காட்டுங்க//

அனு said...

ஏன் இப்படி?

இவ்வளவு நாள் நல்லாத்தானே போய்கிட்டு இருந்தது??

Philosophy Prabhakaran said...

@ கே.ஆர்.பி.செந்தில்
// அவரு ஒரு ஆளு போதுமே தம்பி ... //

அண்ணே... உங்க பின்னூட்டத்தை தான் தேடி வந்தேன்...

மங்குனி அமைச்சர் said...

நல்லா தான் யோசிச்சு இருக்க ?

மங்குனி அமைச்சர் said...

இதுக்குதான் நான் அப்பவே சொன்னே ஓவரா மொக்க போடாத அப்புறம் மூளைக்கு உடம்பு சரியில்லாம போயிடும்ன்னு ...கேட்டியா , கேட்டியா , கேட்டியா .............

சி.பி.செந்தில்குமார் said...

செல்வா .. வித்தியாசமான பதிவு.. நல்லாருக்கு.. மொக்கை மட்டும்தான் போடத்தெரியும்னு நம்பிட்டு இருந்தோம்..

அப்புறம் உங்களுக்கு இன்னும் விளக்கமா புரியனும்னா சுகி சிவம் எழுதுன ஆன்மா தேடல் புக்கும் சுஜாதா எழுதுன கடவுள் புக்கும் படிக்கவும்.

Anonymous said...

இண்ட்லியில இப்பதான் ஓட்டு போட்டேன் ஹிஹி

Anonymous said...

அதாவது இப்ப இந்த உடலுள குடிகொண்டுள்ளோம் , காலம் மாறும்போது ஒரு எறும்போட உடலிலும் குடிகொள்ள வேண்டி இருக்கலாம்னு நினைக்கக்கூடியது.//
பன்னிகுள்ளியும் குடி போவமா ..அய்ய

Anonymous said...

ஓவரா மொக்கை போட்டுகிட்டே இருந்தா இப்டி தான் ஆகும்.. நல்ல டாக்டர் கிட்ட செக் பண்ணுங்க.

Prabu Krishna said...

ஆவ் நல்ல தூக்கம்.

ஆமா படம் முடிஞ்சுடுச்சா ??

தினேஷ்குமார் said...

செல்வா இப்பதான் படிச்சேன் ஆணி அதிகம் கொஞ்சம் அதான் பிளாக் பக்கம் சரியா வரமுடியல....

நல்ல விளக்கங்களுடன் எழுதியுள்ளாய் அருமை