Wednesday, July 7, 2010

மொக்கையும் அதன் வரலாறும் - ஓர் ஆய்வுக் கட்டுரை

                                            மொக்கயாண்டவர் துணை.!

அறிமுகம் : 
       இன்றைய சூழலில் மொக்கை பற்றி அறியாதவர் இலர். இருப்பினும் மொக்கை எனப்படுவது யாதெனக் கூறவேண்டியது அவசியம்.  மொக்கை என்பது சமூகத்தில் வாழும் சில விஷமிகளால் மக்களுக்கு இன்னல் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்படுவது.மொக்கையை பார்த்தாலோ கேட்டாலோ கண்களிலும் காதுகளிலும் ரத்தம் வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் நமது கோபத்தை கிளறச்செய்கிறது.கைதேர்ந்த மொக்கயர்களால் உருவாக்கப்படும் மொக்கயானது தற்கொலை எண்ணத்தினை நமக்குள் விதைக்கிறது என்று அமெரிக்க மொக்கை எதிர்ப்பு கூட்டத்தில் விவாதம் செய்யப்பட்டுள்ளது.மேலும் மொக்கயானது புற்றுநோய் , எய்ட்சு போன்ற உயிர்கொல்லி நோய்களை விடவும் கொடுமையானது என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவித்திருப்பது வருத்தமளிக்கிறது.இவ்வளவு கொடூரமான மொக்கையை பற்றிய ஆய்வுகள் நடந்த வண்ணம் இருக்கிறது. நமது ஆய்வில் கண்டுபிக்கப்பட்ட தகவல்களை இந்த கட்டுரையில் வழங்கியுள்ளோம்.


மொக்கையின் தோற்றமும் வளர்ச்சியும் : 
      மொக்கை எப்பபொழுது தோன்றியது என்பதற்கான ஆதாரங்கள் தற்பொழுது நமக்கு கிடைக்கவில்லை. அது தமிழ்மொழியுடன் இணைந்தே தோன்றியிருக்கலாம் என ஒரு சிலரும் மொழிகளே இல்லாத காலத்திலேயே மொக்கை தோன்றிவிட்டது என ஒரு சிலரும் வாதிடுகின்றனர். மொக்கையின் வளர்ச்சி பல்வேறு காலங்களில் பல படிகளில் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.மேலும் இதிகாச காலங்களிலே மொக்கை பெரும்பங்கு வகித்துள்ளது.
மேலும் கி.மு ஆம் ஆண்டில் மொக்கையனூர் என்ற நாட்டை சார்ந்த மொக்கயரசன் என்பவர் எதிரிகளை பழிவாங்குவதற்காக மொக்கை வளர்ப்பு சங்கம் என்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்தி அதில் பல்வேறு வகையில் மொக்கை போடுவது எப்படி என்று வகுப்புகள் நடத்தப்பட்டதாக வரலாறு நமக்கு தெரிவிக்கிறது. இவரது இந்த தந்திரத்தை முறியடிக்க பல்வேறு பேரரசுகள் முயன்று தோற்றது மொக்கையின் மீது பெரும் மரியாதையினை ஏற்படுத்தியுள்ளது. அந்த பரம்பரையில் வந்தா சிலர் இன்றுவரை மொக்கை போட்டு கொண்டிருப்பது நாம் அறிந்ததே. மேலும் அவர்களது அரசு அதிகப்படியான மொக்கையால் கவிழ்ந்தது அப்போதிருந்த மற்ற நாட்டு அரசர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்த அரசு இல்லாதது அவர்களுக்கு பெரும் பலமாக அமைந்ததென இங்கிலாந்தின் அப்போதைய அதிபர் கூறியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஏனெனில் இந்த அரசு மட்டும் இருந்திருப்பின் ஆங்கிலேயர் இந்தியாவினை பற்றி நினைத்திருக்க முடியாத அளவிற்கு அச்சம் ஏற்பட்டிருக்கும் . மேலும் இந்த அரசு நிலைத்திருப்பின் இந்தியா விண்வெளித்துறையில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டிருக்கலாம் என விண்வெளி அறிஞர்கள் பல பேட்டிகளில்  தெரிவித்துள்ளனர். ஏனென்றால் இந்த அரசு மேலும் கொஞ்ச காலம் நிலைத்திருந்தால் இந்திய மக்கள் அனைவரும் வேறு கிரகத்திருக்கு குடி பெயர்ந்திருப்பர். அதனால் பல அறிய விண்வெளி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்பது அவர்களின் வாதமாக இருக்கிறது.
ஆகவே மொக்கயரசர் காலத்தில் மொக்கையின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது என்பதை நம்மால் கணிக்க முடிகிறது.


திரைப்படங்களில் மொக்கை :
   இன்றைய திரைப்படங்களில் மொக்கை பெரும்பங்கு வகிக்கிறது. ACTION திரைப்படம் என்று கூறிக்கொண்டு வில்லனின் விமானத்தை கதா நாயகன் மாட்டுவண்டியில் துரத்திப் பிடிப்பதும் , கதாநாயகனை 1000 பேர் சேர்ந்து அடித்தாலும் ஒன்றும் ஆகாமல் இருப்பதும் மேலும் துப்பாக்கியால் சுட்ட போதும் கதாநாயகன் உயிர் வாழ்வதும் திரைப்படங்களில் காணப்படும் மொக்கைக்கு எடுத்துக்காட்டுகள். மேலும் தங்களை MASS HERO என்று கூறிக்கொண்டு சிலர் போடும் மொக்கையால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். இந்த கதாநாயகர்கள் "நான் அடிச்சா தாங்க மாட்ட " என்று பாடுவது "நான் அடிச்சா அடி விழாது இடி விழும் " என்று பஞ்ச் வசனங்கள் பேசுவதும் மக்கள் மத்தில் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மற்றொரு கதாநாயகர் "அது" என்று பஞ்ச் வசனம் பேசுவதை குழந்தைகளும் பின்பற்றுவதால் மிட்டைகடைக்காறாக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். ஒரு மிட்டாய் வாங்கிய பின்னர் குழந்தைகள் "அது" என்று மிரட்டுவது போன்ற பாணியில் கூறியவுடன் மிட்டைகடைக்கரர் மற்றோரோ மிட்டாய் எடுத்துக் கொடுக்கும் அவல நிலை காணப்படுகிறது. இந்த கதாநாயகர்களின் திரைப்படங்கள் திரையிடப்படும் தேதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வேறு ஊர்களுக்கு செல்வது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது என பொது நல விரும்பி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற கதாநாயகர்களின் படங்கள் திரையிடப்படும் போது மொத்த தமிழக மக்களும் அண்டை மாநிலங்களுக்கு குடி பெயர்ந்துவிடலாம் என்ற அச்சத்தினால் தமிழ்நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


சின்னத்திரையில் மொக்கை : 
   திரைப்படங்களைக் காட்டிலும் சின்னத்திரையில் அதிகப்படியான மொக்கை உருவாக்கப்படுகிறது என்பது தொடர் நாடகம் பார்க்கும் பெண்களின் கணவர்களின் கூற்று. மேலும் இது போன்ற மொக்கை தொடர்களை பார்க்கும் பெண்களுக்கு விரைவில் பல நோய்கள் தாக்கும் வாய்ப்பு உள்ளதாக ஒரு அறிஞர் எச்சரித்துள்ளார். அதிலும் தற்பொழுது சில தொடர்கள் அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் கூறினால் பரிசுகள் தரப்போவதாக அறிவிப்பதால் வீட்டில் உள்ள அனைவரும் தொடரை பார்க்கும்படி வற்புறுத்தப்படுகிறார்கள். இதனால் குடும்ப உறவுகளில் சிக்கல் ஏற்படும் அபய நிலை காணப்படுகிறது.இதனால் இதுபோன்ற மொக்கை தொடர்களை பார்க்க சகிக்காமல் தொலைக்காட்சிப் பெட்டிகளை உடைக்கும் சம்பவங்களும் ஆங்கங்கே நடப்பதும் நாம் அறிந்ததே.!


வலைப்பூக்களில் மொக்கை :
   வலைப்பூக்களில் பெரும்பாலும் மொக்கை போடப்படுகிறது. புதிய பதிவர் முதல் பழைய பதிவர் வரை அனைவரும் மொக்கை போடுவதில் அதிக கவனம் செலுத்துவது தற்பொழுது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு சில பதிவர்கள் மொக்கை போடுவதாக தெரியவில்லை.(எ.கா:தேவா ).இருப்பினும் வலைப்பூக்களில் மொக்கை போடுவதற்காகவே சிலர் முயற்சித்து (கோமாளி)வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மொக்கையின் விளைவுகள்  :
   மொக்கயானது ஒரு தோற்று நோய் போல விரைவில் பரவக்கூடியது. இதனை உருவாக்குபவரே இந்நோய்க்கு ஆளாவது பரிதாபத்திற்கு உரியது.மேலும் ஆண்டுக்கு ஆண்டு  மொக்கையல் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மொக்கைக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாதது மக்கள் மத்தியில் பேரும் கிலியை ஏற்படுத்தியுள்ளது.சில மொக்கைகள் சிரிப்பினை உருவாக்குவதால் மொக்கைகளை வேறுபடுத்தி அழிப்பதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளதாக தன்னார்வ தொண்டு அமைப்புகள் தெரிவித்துள்ளன. விரைவில் இது போன்ற மொக்கைகளுக்கு ஒரு முடிவு கிடைக்க வேண்டும் என்பதே நமது அவா..!

31 comments:

சௌந்தர் said...
This comment has been removed by the author.
சௌந்தர் said...

மொக்கைக்கு இப்படி விளக்கம் கடி முடியலை //

(பின்குறிப்பு : இந்த பதிவிற்கு குறைந்தபட்சம் 100 வோட்டுகளும் , 100 கமெண்ட்டுகளும் கிடைக்க வேண்டுமென ஆசையில் எழுதியுள்ளேன் . அதனால தயவு செய்து என்னோட ஆசைய நிறைவேற்றி வையுங்க..!)

ஓரு வோட்டுக்கு 2000 ரூபாய் தரனும் கள்ள வோட்டுக்கு அதிகம் பணம் தரனும் நம்ம மக்கள் அப்படி
July 7, 2010 6:48 PM

dheva said...

மொக்க திலகம் தம்பி செல்வு...வாழ்க.வாழ்க...

ஹா..ஹா..ஹா..இன்னும் சிரிச்சுகிட்டுதான் இருக்கேன் தம்பி! வாழ்த்துக்கள்!

Sri Sabari said...

Neeka sonnathu Mokkai ella
Ethu thaan supper Mokkai

Jeyamaran said...

*/இன்றைய திரைப்படங்களில் மொக்கை பெரும்பங்கு வகிக்கிறது. ACTION திரைப்படம் என்று கூறிக்கொண்டு வில்லனின் விமானத்தை கதா நாயகன் மாட்டுவண்டியில் துரத்திப் பிடிப்பதும் , கதாநாயகனை 1000 பேர் சேர்ந்து அடித்தாலும் ஒன்றும் ஆகாமல் இருப்பதும்/*

ஹலோ இதெல்லாம் நீங்க விஜயகாந்த் படத்தை பார்த்து எழுதிருபிங்கனு நினைக்கிறன்

LK said...

sema mokkai

பிரவின்குமார் said...

உங்க மொக்கையும் அருமை..!

வழிப்போக்கன் said...

உலக மகா மொக்கை. நீங்கதான் அந்த மொக்கை வம்ச வழியில் வந்தவரோ?

வழிப்போக்கன் said...

வரலாறுல ஹாய் மதனுக்கு போட்டியாக வரக்கூடிய வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளதாக மொக்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒரு மொக்கை இன்னொரு மொக்கையை
பற்றி எழுதி இருக்கிறதே
அடடே ஆச்சரியக் குறி

Chitra said...

சில மொக்கைகள் சிரிப்பினை உருவாக்குவதால் மொக்கைகளை வேறுபடுத்தி அழிப்பதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளதாக தன்னார்வ தொண்டு அமைப்புகள் தெரிவித்துள்ளன. விரைவில் இது போன்ற மொக்கைகளுக்கு ஒரு முடிவு கிடைக்க வேண்டும் என்பதே நமது அவா..!

........ "இதில் தாங்கள் எந்த வகை மொக்கை போட்டு இருக்கிறீர்கள் என்று தங்களுக்கே தெரியும்.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... 100 வோட்டு கிடைக்க - ஒரு வோட்டு என் சார்பா...... வாழ்த்துக்கள்!"

வால்பையன் said...

:)

வெறும்பய said...

மொக்கைக்கு விளக்கம் சொல்றேன்னு மொக்கையா இப்படி மொக்கை போட்டு கண்களில் ரத்தம் வரவழைத்த மொக்கை மன்னனுக்கு சிறந்த மொக்கை பதிவர் பட்டயம் தரலாம் என்று ஐ நா சபையில் விவாதம் நடைபெறுவதாக சில நம்ப தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

வெறும்பய said...

(பின்குறிப்பு : இந்த பதிவிற்கு குறைந்தபட்சம் 100 வோட்டுகளும் , 100 கமெண்ட்டுகளும் கிடைக்க வேண்டுமென ஆசையில் எழுதியுள்ளேன் . அதனால தயவு செய்து என்னோட ஆசைய நிறைவேற்றி வையுங்க..!)

///

கொஞ்சம் செலவாகுமே.... பரவாயில்லையா ...

வெறும்பய said...

.இருப்பினும் வலைப்பூக்களில் மொக்கை போடுவதற்காகவே சிலர் முயற்சித்து (கோமாளி)வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

////


உண்மை... உண்மை... உண்மை...

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

16

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

17

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

18..... 100

S.Visvanathan said...

Good..... Keep it up.....

Mokkaikal eppo aliyutho appa unga ava niraiverum.....

விஜய் said...

ஹ ஹ ஹ ....சரியான மொக்கை....எடுத்து சொன்ன விதம் ரொம்ப அழகா இருக்கு ....
அனைத்தையும் தொகுத்த விதம் அருமை தம்பி ...
இன்னும் நிறையா மொக்கை போட எனது வாழ்த்துக்கள்

Wilson said...

பொதுவா பசங்க பொண்ணுங்ககிட்ட தான் போடுவாங்க. இது கொஞ்சம் வித்தியாசமான‌ மொக்கை. ஒரு ஆய்வு கட்டுரைக்குள்ள அனைத்து அம்சங்களும் (உள் தலைப்புக்கள்)இதில் பார்ர்க்கிறேன். அவையெல்லாமே சொல்லுது நீங்க ஒரு ஆய்வு மாணவர்னு. சரியா??

cs said...

Ithanal sagalavithamaanavargalukkum theriviththuk ;;kolvathu;; ennavendral,,agila ulaga mokkaiyargal sanga thalaivaraga sevakumarai theriviththuk ;;kolgirom;;

ஜீவன்பென்னி said...

sema mokka.....

நீச்சல்காரன் said...

superu ha ha

பத்மஹரி (Padmahari) said...
This comment has been removed by the author.
பத்மஹரி (Padmahari) said...

செல்வக்குமார் மொக்கை சூப்பரோ சூப்பர்.....எவ்வளவு முயற்ச்சி செஞ்சும், சிரிப்பு இன்னும் நின்னபாடில்லை...ஹா ஹா ஹா.... :-)
பத்மஹரி,
http://padmahari.wordpress.com

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

மொக்கைக்கு இவளவு வரலாறு இருக்கிறதா ! தீவிரமான அலசல்தான் . பகிர்வுக்கு நன்றி

அன்புடன் மலிக்கா said...

மொக்கையோ மொக்கை.

http://niroodai.blogspot.com

Jey said...

உங்களுக்கு “ பதிவுலக மொக்கை ஸ்டார் “ என்ற பட்டம் வழங்கப்படுகிறது.

சந்ரு said...

மொக்கையப் பற்றி மொக்கை என்று சொல்லி. மொக்கை மொக்கையா எழுதி இருக்கிங்களே.... நீங்கதானே அந்த மொக்கை இளவரசன்.

நாஞ்சில் பிரதாப் said...

மொக்கைக்காக ஒரு மொக்கை பதிவா.... முடில... நல்லாருடே...