Saturday, July 17, 2010

ஆணாதிக்கம்

எதெல்லாம் ஆணாதிக்கம் என்று குழம்பிப் போயுள்ளீர்களா...? உங்களுக்காகவே இந்தப் பட்டியல் 

*.வரலாறு மற்றும் அறிவியலில் கூட குரங்கிலிருந்தே மனிதன் தோன்றினான் என்று ஆண் பாலினை மட்டுமே குறிப்பிட்டு சொல்லுவது ..!

*.பேருந்துகளிலோ அல்லது வெளியூர் பயணங்களின் போது பணத்தை மனைவியிடம் கொடுக்காமல் தாங்களே டிக்கெட் எடுத்து தங்களது ஆணாதிக்கத்தை காட்டுவது மற்றும் 
மனைவியிடம் பணத்தை கொடுத்து டிக்கெட் எடுக்க சொல்லி வேலை வாங்குவது.

*.புடவையை சரியாக அடித்து துவைக்காமல் அழுக்குடன் விட்டுவைத்தல் மற்றும் புடவையை அடித்து துவைக்கிறேன் என்று சொல்லி புடவைக்கு வலி உண்டாக்குதல்.

*.சீரியல் பார்த்துக்கொண்டிருக்கும் போது "சமையல் ரெடி" என்று கூறி சாப்பிடக் கூப்பிடுவது மற்றும் சமையல் முடிந்த பிறகும் சீரியல் முடிந்த பின்பு சாப்பிடக் கூப்பிடலாம் என்று அலட்சியாமாக இருப்பது.

*.தாய் வீட்டிற்க்குச் செல்லும் போது "இரண்டு நாளுக்கு இருந்துவிட்டு வா" என்று கூறி வேலையிலிருந்து தப்பிக்கப் பார்ப்பது மற்றும் தாய் வீட்டிருக்கு செல்லும் போது உடனே வந்துவிடு என்று கூறி இரக்கமில்லாமல் நடந்து கொள்வது.

*.மனதிற்குப் பிடித்த சேலையை நிழலில் காயப் போட்டு சீக்கிரம் காய விடாமல் சதித்திட்டம் தீட்டுவது மற்றும் மனதிற்குப் பிடித்த சேலையை வெய்யிலில் காயப்போட்டு கலர் மங்கிவிட சதித்திட்டம் போடுவது.

*.ஏதேனும் சண்டைகளின் போது மீசை வைத்த ஆம்பிளை என்று கூறி பெண்களுக்கு இல்லாத ஒன்றைப் பற்றி பெருமிதம் கொள்வது.

*.ஆண்களுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆண்கள் அணியும் ஜீன்ஸ் , டி-சர்ட் போன்றவற்றை பெண்கள் அணித்து வெளியே சென்ற போதும் ஆண்கள் பெண்கள் அணியும் சேலை , சுடிதார் போன்றவற்றை அணியாமல் பெண்களுக்கு சம உரிமை கொடுக்காமல் இருப்பது.

*. பெண்களை ஆதிக்கம் செய்து கொண்டு அதன் தலைப்பை ஆணாத்திக்கம் என்று வைத்திருப்பது ஆணாதிக்கத்திலும் ஆணாதிக்கம்.

(என் புத்தி எனக்கு கூறிய அறிவுரை : மச்சி நீ இப்படியே எழுதிட்டிருந்தீனு வையே ஒரு பிகர் கூட உன்ன மதிக்காது )

மொக்கை : காசு கொடுக்காம மொட்டை அடிக்கணுமா ..?
ஒரு சலூன் கடைக்கு போய்க்கோங்க., அங்க என் தலைய ஷேவிங் பண்ணி விடுங்க அப்படின்னு கேளுங்க. அவரு உங்களுக்கு மொட்டை அடிச்சிடுவார். அடிச்ச பின்னாடி " யோவ் , மீசை எங்கயா..?" அப்படின்னு கேளுங்க. அதுக்கு அவர் " தலைல எப்படிங்க மீசை இருக்கும் ..?" அப்படின்னு சொல்லுவார். "தலைல மீசை இருந்ததனால தான் நான் ஷேவிங் பண்ண சொன்னேன் , இல்லனா மொட்டை அடிச்சிடு அப்படின்னு சொல்லிருப்பேன்ல" அப்படின்னு சொல்லி "உனக்கு காசு தர மாட்டேன்னு "
 சொல்லிடுங்க .. எப்படி நம்ம ஐடியா ...?

26 comments:

Riyas said...

//*.வரலாறு மற்றும் அறிவியலில் கூட குரங்கிலிருந்தே மனிதன் தோன்றினான் என்று ஆண் பாலினை மட்டுமே குறிப்பிட்டு சொல்லுவது ..!//

அப்ப பெண்பாலினை குறிப்பிட்டு சொல்வதாகயிருந்தால் எப்படி சொல்லுங்களே..

விஜய் said...

எப்படி தம்பி இப்படி .
முடியல, உட்கார்ந்து யோசிப்பீங்களோ ....ஹ ஹ் அஹ அஹ ஹ ஹ

சூப்பர்ட தம்பி

cs said...

ayyo sami mudiyale.

venam venam appuram

nan azhuthuruven.

சௌந்தர் said...

மச்சி நீ இப்படியே எழுதிட்டிருந்தீனு வையே ஒரு பிகர் கூட உன்ன மதிக்காது//

இப்போ மட்டும் எந்த பிகர் நம்ளை மதிக்குது என்ன மச்சி

ஜீவன்பென்னி said...

செல்வா அடிச்சு கடிச்சுக்காயப்போடுறயே. கலக்கலா இருக்கு.

அருண் பிரசாத் said...

உங்களுக்கு கல்யாணம் ஆகிச்சா? ரொம்ப தைரியமா உண்மை பேசுறீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மனதிற்குப் பிடித்த சேலையை நிழலில் காயப் போட்டு சீக்கிரம் காய விடாமல் சதித்திட்டம் தீட்டுவது மற்றும் மனதிற்குப் பிடித்த சேலையை வெய்யிலில் காயப்போட்டு கலர் மங்கிவிட சதித்திட்டம் போடுவது.
///
உன் girl Friend-கிட்ட செம அடி வாங்கிருப்ப போல..

ப.செல்வக்குமார் said...

Riyas said...
அப்ப பெண்பாலினை குறிப்பிட்டு சொல்வதாகயிருந்தால் எப்படி சொல்லுங்களே..

மனுசி னு சொல்லணும் ..
அதாவது குரங்கிலிருந்து மனிதனும் , மனுசியும் வந்தனர் அப்படி எழுதணும் .. அப்பத்தானே ஒரே குரங்கிலிருந்தா அப்படின்னு இன்னொரு பதிவு எழுத முடியும் ..

ப.செல்வக்குமார் said...

///அருண் பிரசாத் said...
உங்களுக்கு கல்யாணம் ஆகிச்சா? ரொம்ப தைரியமா உண்மை பேசுறீங்க///
அண்ணா .., அப்படியெல்லாம் இல்ல .. நீங்க பாட்டுக்கு ஏதாவது எழுதிட்டு போய்டாதிங்க .. நான் இன்னும் காம்ப்ளான் குடிச்சிட்டிருக்கேன் ..

ப.செல்வக்குமார் said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
உன் girl Friend-கிட்ட செம அடி வாங்கிருப்ப போல.///
இவரு அதுக்கு மேல ..?

Jeyamaran said...

*/என் புத்தி எனக்கு கூறிய அறிவுரை : மச்சி நீ இப்படியே எழுதிட்டிருந்தீனு வையே ஒரு பிகர் கூட உன்ன மதிக்காது/*
இதுதான் உண்மை

நல்ல ஆணாதிக்கம்

Jeyamaran said...

கடைசில சொன்ன ஐடியா சூப்பர் சொந்த அனுபவமோ

Jey said...

யெப்பா, வாப்பா..., யாருன்னு சொல்லு அந்த அம்மனிய ஒரு வழி பண்ணிரலாம்.( பாவம் பயபுள்ள எஙகயோ நல்லா வாங்கிட்டு வந்திருக்கும் போல..)

மதுரை சரவணன் said...

//ஆண்களுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆண்கள் அணியும் ஜீன்ஸ் , டி-சர்ட் போன்றவற்றை பெண்கள் அணித்து வெளியே சென்ற போதும் ஆண்கள் பெண்கள் அணியும் சேலை , சுடிதார் போன்றவற்றை அணியாமல் பெண்களுக்கு சம உரிமை கொடுக்காமல் இருப்பது.//

எப்படி இப்படி....அசத்துங்க.... வாழ்த்துக்கள்

பிரசன்னா said...

//ஏதேனும் சண்டைகளின் போது மீசை வைத்த ஆம்பிளை என்று கூறி பெண்களுக்கு இல்லாத ஒன்றைப் பற்றி பெருமிதம் கொள்வது//

ha ha ha

ரோஸ்விக் said...

ம்ம்ம்... சிறப்பா இருக்கு அன்புத்தம்பி. :-)

சந்தோஷ் = Santhosh said...

சூப்பர் செல்வா சான்ஸே இல்ல நல்லா எழுதி இருக்கே? ஆமா உனக்கு கல்யாணம் ஆயிடிச்சா?

Faaique Najeeb said...

gud....

வெறும்பய said...

சிறப்பா இருக்கு..
அசத்துங்க.... வாழ்த்துக்கள்

சி. கருணாகரசு said...

கலக்கல்.... (உங்க அனுபவமா)

கார்த்தி said...

Selva, nalla irukku, Keep it up.

பிரவின்குமார் said...

நகைச்வைமிக்க அருமையான கற்பனை நண்பரே..! உங்க மனசாட்சி சொன்னதும் சரியாகத்தான் இருக்கும் போலிருக்கு.. அப்புறம் கடைசியில போட்ட மொக்கை எப்பா... தாங்க.. முடியலப்பு...!!!

வால்பையன் said...

உமக்கு மொட்டை அடிக்க காசு நான் தர்றேன்!

Kousalya said...

நல்ல நகைசுவை நடை... பலரையும் கவர்ந்துடீங்க..வாழ்த்துகள்

Anonymous said...

கூடிய விரைவில் (Radio Jockey ) ஆக வாழ்த்துகள்... you have a thinking ability to do that one.

Anonymous said...

kutraalam said...
கூடிய விரைவில் (Radio Jockey ) ஆக வாழ்த்துகள்... you have a thinking ability to do that one.