Thursday, July 29, 2010

காதலிக்க மரம் வளர்.!

சிலர் வருவதும் போவதுமாக இருந்தது அந்தப் பேருந்து நிறுத்தம். அந்த பேருந்து நிறுத்தத்தில் தான் தீபாவும் நின்றுகொண்டிருந்தாள் கையில் சிறிய மரக்கன்றுடன்.
இன்று எப்படியேனும் தீபாவிடம் தனது காதலை வெளிப்படுத்திவிடவேண்டும் என்ற வேகத்தில் வழக்கம் போல அந்தப் பேருந்து நிறுத்தத்திற்கு விரைந்து கொண்டிருந்தான் ரியாஸ். இதுவரை ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. ஆனாலும் தினமும் அதே பேருந்து நிலையத்தில் இவன் தீபாவை பார்ப்பது வழக்கம். அவளும் அடிக்கடி இவனைப் பார்த்து புன்னகைப்பதால் அவளும் தன்னைக் காதலிப்பதாக இவன் கருதினான். ஆதலால் இன்று எப்படியும் அவளிடம் தனது காதலை சொல்லியே தீருவதென அவளருகில் சென்றான். மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நேரடியாகவே சொல்லிவிடலாமெனத் தீர்மானித்து ,

"தீபா ஐ லவ் யூ" என்றான்..

அதனைக் கேட்டவுடன் தீபா கையிலிருந்த மரக்கன்றினை இவனது கைகளில் கொடுத்து விட்டு " வீட்டுல நட்டு வைங்க, ஒரு மாதம் கழித்துப் பார்க்கலாம் " என்றாள்.

"தீபா எனக்கு புரியல ..? நீ என்ன சொ.." என்று அடுத்த கேள்விக்குப் போவதற்குள் அவளது பேருந்து வந்துவிடவே அவள் இவனிடம் எதுவும் கூறாமல் பேருந்தில் ஏறிச்சென்று விட்டாள். ஆனால்  ரியாசிற்கு குழப்பமாக இருந்தது. இருந்தாலும் அவனுக்கு ஒன்று புரிந்தது. இந்த மரக்கன்றினை வீட்டில் நட்டு வளர்த்தினால் அது ஒரு மாதத்தில் எவ்வளவு வளர்கிறதோ அவ்வளவு அன்பு நான் அவள் மேல் வைத்திருக்கிறேன் என்று கண்டுபிடிக்க இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டான்.

ரியாஸ் மற்றும் நண்பர்கள் ஜெய் , அருண் , சௌந்தர் , விஜய் ஆகியோர் சென்னையில் ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இவர்கள் ஐவரும் சென்னையின் புறநகர்ப் பகுதியொன்றில் ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர்.

ரியாஸ் சந்தோசத்துடன் வீட்டிற்குள் நுழைவதைப்பார்த்த நால்வரும்
"என்னாச்சு மச்சா ..ஓ கே வா ...?" என்றனர்.
"ஓ கே னு தான் நினைக்கிறேன்." என்றபடி மரக்கன்றினை டேபிள் மேலே வைத்தான்.
"இதெதுக்கு மச்சி ..?" என்றான் சௌந்தர்.
ரியாஸ் அங்கு நடந்தவற்றை விவரித்துவிட்டு " அவ எதுக்கு குடுத்திருப்பான்னு  நினைக்கிற ..? " என்றான்.
" ஓ . என்னமோ ஓகே னு சொன்ன..? " அவ இத கொடுத்ததே உன்ன போட்டு தள்ளுறதுக்குத்தான்.." என்றான் விஜய்.
"என்ன சொல்ற மச்சி ..? " என்று கொஞ்சம் பதட்டத்துடன் கேட்டான் ரியாஸ்.
" ஆமா மச்சி ., இத வளர்த்துனா பெருசா வளருமா .. அத வெட்டி அப்படியே உன்ன சுடுகாட்டுல வச்சு எரிசிடுவேன் அப்படின்னு சொல்லிருக்கா..! " புது விளக்கம் தந்தான்.
" ஆமால்ல , மரம் விறகா  கூட பயன்படும் .."
" அப்படியில்ல மச்சி இவன கொன்னு ஒரு சவப்பெட்டிக்குள்ள வச்சு அனுப்பிடுவேன் அப்படின்னு சொல்லிருக்கா.. அதுக்கு சிம்பாலிக்கா தான் இந்த மரக்கன்று. "
" அட ஆமா மரத்துல தான இத்தன பெட்டி , அலமாரி இன்னும் எத்தனையோ சாமான்களெல்லாம் செய்யுறோம். ஆனாலும் மரம் வளர்க்கரக்கு தயங்குறோம்.." என்றான் ரியாஸ்.
"என்னடா ஆச்சு உனக்கு , இப்பூடி எல்லாம் பேசுற..? " என்றான் சௌந்தர்.
"அது ஒண்ணும் இல்ல மச்சி , பயபுள்ள காதலிக்குதாம்ல ..? " இனிமேல் பாரு கவிதை , தத்துவம்னு நம்ம உசுர எடுக்கப் போறான் ." இது ஜெய். பேசியவாறே அனைவரும் உறங்கச்சென்றனர்.

மறுநாள் காலையில் மூவரும் எழுந்து ரியாஸ் எங்கடா போனான் , நம்மளுக்கு முன்னாடி ஒரு நாள் கூட எழுந்திரிக்க மாட்டானே என்று பேசிக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் ரியாஸ் கையில் ஒரு பெட்டியுடன் உள்ளே வந்து கொண்டிருந்தான். அதைப் பார்த்த விஜய் " டேய் , என்ன மச்சி இது ..? " என்றான் .
" பிஸ்லேரி வாட்டர் .."
"எதுக்கு ..? நமக்குத்தான் இங்கே தண்ணி வருதுல்ல ..? "
"இது நமக்கு இல்ல மச்சி , செடிக்கு ..! "
அனைவரது முகத்திலும் ஆச்சர்யம் .. " டேய் , லூசாடா நீ ..? செடிக்கெல்லாம் எதுக்குடா பிஸ்லேரி வாட்டர் .. பிஸ்லேரி வாட்டர் தான் குடிப்பேன்னு  அது உன்கிட்ட கேட்டுச்சா..? "
"நீ என்ன வேணா சொல்லிட்டு போ மச்சி , இந்த செடிலதான் என்னோட லைபே இருக்கு .."
"அட விடு மச்சி அவனுக்குத்தான் லவ் வந்திடுட்சுல்ல இனிமேல் பாரு , இன்னும் எத்தனயோ இருக்கு ..? " என்றான் ஜெய்.

இரண்டு நாட்கள் நகர்ந்திருந்தது. காலையில் 5 மணி அளவில் ரியாஸ் அனைவரையும் எழுப்பி " மச்சி செடி ஒரு இலை விட்டுருக்கு " என்றான் சந்தோசமாக.!

இரவு தூங்குவதற்கு நேரமானதால் அனைவரும் தூக்க கலக்கத்தில் இருந்தனர். " டேய் உன் பிகர் , உன் செடி .. அதுல இலை வந்தா என்ன தலை வந்தா என்ன ..? எங்க உசுர ஏன்டா எடுக்குற ..? " என்றான் விஜய்.

"சரி விடு மச்சி .. ஆல் தி பெஸ்ட் .. என்று கைகுலுக்கி விட்டு மீண்டும் தூங்கிவிட்டனர் மற்ற இருவரும்..

"அடச்சே என்னோட பீலிங்க்ஸ யாருமே புரிஞ்சிக்க மாட்டீங்கறீங்க. " என்று அலுத்துக்கொண்டே அந்த செடியைப் பார்த்தான் ரியாஸ்.

நாட்கள் நகர்ந்தது. 8 ஆம் நாள் செடி கொஞ்சம் வாடி இருந்தது . அலுவலகத்திலிருந்து வந்த ரியாஸ் " மச்சி , செடி வாடிப் போச்சு .. என்ன பண்ணலாம் ..? " என்றான் .
"டாக்டர் கிட்ட கூட்டிட்டு போ . ஒரு ஊசி போட்டார்னா  சரியாய்டும்  .? " என்று கோபமாக கூறிவிட்டு வெளியே சென்று விட்டன சௌந்தர். அவனது கோபத்திலும் நியாயம் இருந்தது. அந்தச் செடி வந்ததிலிருந்து கடந்த 8 நாட்களாக கவிதை சொல்கிறேன் என்று அனைவரின் உறக்கத்தையும் கெடுத்து வந்தான். இதை விட நேற்று மருத்துவர்கள் பயன்படுத்தும் stethoscope ஐ எடுத்து வந்து அவளது இதயத்துடிப்பினை கேட்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தது இவர்களிடையே பெரும் எரிச்சலை உண்டாக்கியிருந்தது.

நாளாக நாளாக அந்தச் செடி மேலும் வாடிக் கொண்டிருந்தது . ரியாசும் என்னவெல்லாமோ செய்து பார்த்தான். ஆனாலும் 15 ஆம் நாள் சுத்தமாக வறண்டு போனது . தண்ணீர் அதிகமாக ஊற்றியதால் வேரழுகல் நோயினால் வறண்டு போனது. இதனைப் பார்த்த ரியாசிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
"மச்சி என் லைபே முடிஞ்சு போச்சு மச்சி.." என்று அழுதுகொண்டே அவர்களிடம் வறண்டு போன செடியைக் காண்பித்தான்.

என்னதான் கோபம் இருந்தாலும் அவனைப் பார்க்க கஷ்டமாக இருந்தது. " விடு மச்சி .. அவ என்னமோ பிளான் போட்டுத்தான் உன்கிட்ட கொடுத்திருக்கா." என்று ஏதேதோ சொல்லி அவனை தேற்ற முயன்றனர்.
" இல்ல மச்சி .. அவ ஒரு மாசத்துக்கு அப்புறம் வந்து இந்தச் செடியப் பார்த்தா நான் எப்படி காமிக்கிறது . பெருசா வளர்ந்திருந்தா சந்தோசமா காமிக்கலாம் ..என்ன பண்ணுறதுனே தெரியல ..? என்றான்.
"சரி விடு மச்சி .." எதாவது ஐடியா கிடைக்காமலா போய்டும்.." என்று ஆதரவு கூறினான் ஜெய். இரவு உணவிற்குப் பின்னர் அனைவரும் உறங்கச்சென்றனர். இரவு 1 மணியளவில் ரியாஸ் வேகமாக அனைவரையும் எழுப்பினான்.. அனைவரும் தடுபுடளாக எழுந்து என்ன என்ன என்றனர்..
"மச்சி ஒரு சின்ன உதவி . 2 வது வீதில ஒரு மரம் பார்த்தேன் அதைய எப்படியாவது நம்ம வீட்டுக்கு கொண்டு வந்திட்டா போதும் ..!" என்றான்.
"சரி மச்சி காலைல புடுங்கிட்டு வந்திடலாம் .."
"இல்ல .. இப்பவே புடிங்கிட்டு வந்தாத்தான் யாரும் பாக்க மாட்டாங்க .. ப்ளீஸ் மச்சி எனக்காக .." என்றான் கெஞ்சலாக.
"சரி எப்படி பிடுங்கறது .. மண்வெட்டி , கடப்பாரை எல்லாம் வேணும்ல ..?"
" எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன் மச்சி .." என்றான் ஒரு அசட்டுச் சிரிப்புடன்.
"சரி வா போலாம் , சௌந்தர், ஜெய் நீங்க ரூம்ல இருங்க வந்திடறோம் " என்று மூவரும் கிளம்பினர்.

இரண்டாவது தெருவை அடைந்ததும்
"மச்சி இந்த மரம் தான்டா ..! " என்று ஒரு மரத்தினைக் காட்டினான்.
"அதற்குக் கீழே ஒரு சிறிய செடி ஒன்றும் இருந்தது . அதனைப் பிடுங்கப்போன விஜயை
"அது இல்ல மச்சி , இது ..! " என்றான்.
"அதைப் பார்த்ததும் விஜய்க்கு தூக்கி வாரிப்போட்டது.. அப்படியே இரண்டடி பின்னால் வந்தான் .. டேய் என்ன சொல்ற ..? உனக்கு கிறுக்கு புடிச்சுப்போச்சா..? " என்றான்.
ஆமாம் அவன் காட்டியது ஒரு பெரிய மரம். எப்படியும் 4 வருடம் இருக்கும். ஒரு மின்கம்பத்தின் உயரம் இருந்தது.
" ப்ளீஸ் மச்சி , இத பிடுங்கி கொண்டு போயிட்டா பிரச்சினையே இல்ல ..?"
"போடா வெண்ண , உன்ன நம்பி இத்தன தூரம் வந்தேன் பாரு ..! " என்று கூறி விட்டு அவனையும் பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றனர்.

வீட்டிருக்குச் சென்றதும் ரியாஸ் தனது லேப்டாப்பை எடுத்து கூகுளில் எதையோ தேட ஆரம்பித்தான். " டேய் , இனிமேல் ஏதாவது மரத்தைப் புடுங்கலாம் , மயிரப் புடுங்கலாம் அப்படின்னு கூப்பிட்டுப் பாரு ...?? " என்ற படியே உறங்கச் சென்று விட்டனர் இருவரும்.

ரியாஸ் கூகுளில்  மரங்களைப் பற்றித் தேடியது அவனை வியப்பில் ஆழ்த்தியது.
"ஒரு மரம் ஒரு வருடத்தில் 27 kg pollution ஐக் கட்டுப்படுத்தக் கூடியது. நாம் ஒவ்வொருவரும் நமது வீட்டில் ஒரு இரு சக்கர வாகனமும் நான்கு சக்கர வாகனமும் அவசியம் என்று நினைக்கிறோம். ஆயினும் அவற்றால் ஏற்படும் மாசினை தடுக்க ஒரு மரம் வளர்ப்பதும் அவசியம் என்பதைப் புரிந்து கொண்டான்." 
மரம் வளர்ப்பதால் நாம் இழப்பது ஒன்றும் இல்லை . வளரும் வரை தண்ணீர் ஊற்றினாலே போதுமானது. மேலும் எண்ணற்ற பயன்கள் இருப்பதை உணர்ந்து கொண்டான் .


மறுநாள் காலை ரியாஸ் உற்சாகமாகக் காணப்பட்டான். இதனைப் பார்த்த மற்ற மூவரும் வியப்பில் வாயடைத்துப் போயினர்.
"மச்சி நாளைக்கு உன்னோட பிறந்த நாள் வருதுல்ல ..? ட்ரீட் எங்க வச்சுக்கலாம் ..? " என்றான் விஜய்.
" இந்த பிறந்த நாளுக்கு ட்ரீட் கிடையாது , ஏன் இனி எந்தப் பிறந்தநாளுக்குமே ட்ரீட் கிடையாது..!!" என்றான் ரியாஸ்.
"அட பாவி ., என்னாச்சு மச்சி .. இதுக்கும் அவ ஏதாவது வேட்டு வச்சிட்டாளா  ..? இது சௌந்தர்.
"அது நாளைக்குத் தான் தெரியும் ..! " சிரித்த படியே கூறினான் ரியாஸ்.

மறுநாள் காலை ரியாஸ் ஒரு ஆட்டோவில் 100 மரக்கன்றுகளுடன் வந்திறங்கினான். மூவரையும் எழுப்பிவிட்டு " வாங்கடா , ரோடுக்குப் போய் எல்லாருக்கும் இந்த மரக்கன்றுகளை இலவசமா கொடுக்கலாம் ..! " என்றான்.
"ஓ .. இப்பூடிஎல்லாமா காதல் பேய் பண்ணுது .. பரவால்லியே .." என்றன் அருண்.
 நால்வரும் சாலையில் நின்று சாலையில் வருவோர் போவோருக்கு மரக்கன்றுகளை வழங்கிகொண்டிருந்தனர். தீபாவும் அந்த வழியாக வந்துகொண்டிருந்தாள் . இவர்களைப் பார்த்ததும் வண்டியை நிறுத்திவிட்டு அருகில் வந்தாள்.
"வாங்க மேடம் ., இன்னிக்கு எங்க நண்பனோட பிறந்தநாள் . அதுக்காக எல்லோருக்கும் இலவசமா மரக்கன்றுகள தரான். இந்தாங்க " என்று நீட்டினான் சௌந்தர். அதனைப் பார்த்த ரியாஸ் தீபாவின் அருகில் வந்து
" நீங்க கொடுத்த மரம் வறண்டு போச்சு ..! " என்று சோகத்துடன் கூறினான்.
"அப்பா ஊருக்கு போய்ட்டார்.." என்றாள் தீபா .
ரியாசுக்கு ஒன்றும் புரியவில்லை. " அதில்லீங்க , அந்த செடி வறண்டு போச்சுன்னு சொன்னேன் .."
"ஆமா , மீனா என்னோட friend தான் ..! சரி வரேங்க " என்று கூறிவிட்டு வண்டியை நோக்கி போய்விட்டாள்.
என்னடா நாம ஒண்ணு சொன்ன இவ ஒண்ணு சொல்லுறா என்று நினைத்துக்கொண்டிருந்தான் ரியாஸ்.
அப்பொழுது பக்கத்தில் நின்றுகொண்டிருந்த இன்னொருவர் " இந்தப் பொண்ணுக்கு காது கொஞ்சம் கேக்காது. அந்த மிசின் வச்சிருப்பா மறந்துட்டு வந்திட்டா போல .." என்று கூறிவிட்டு ஒரு மரக்கன்றினை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார்.
"மச்சி நீ பேசுறதப் பார்த்தா இதுதான் அந்த பிகரா..? " என்றான் ஜெய்.
"ஆமாண்டா..! ஆனா அவளுக்கு காது கேக்காதுன்னு எனக்குத் தெரியாது ..!! "
" அட பாவி ., அப்ப அவ எதுக்கு உன்கிட்ட அந்த செடிய கொடுத்தாளோ...? நீ அத கொண்டு வந்து எங்க உசுர வாங்கிட்டியே ..? "
"விடு மச்சி .. இருந்தாலும் நான் மரங்களோட நன்மைகளைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டேன்ல.. இருந்தாலும் அவ என்ன லவ் பண்ணுறானு தான் நினைக்கிறேன்.."
"ஆமா மச்சி ., அப்படித்தான் தெரியுது.. நாங்களும் உதவி செய்யுறோம் ..! " என்றனர் மூவரும்.!

பின்குறிப்பு : சிரிப்பு வரும்னு நினைச்சு இவ்ளோ பெரிய கதைய எழுதிட்டேன். சிரிப்பு வந்தா சொல்லுங்க . வரலைனாலும் சொல்லுங்க ..அடுத்த சிறுகதைல வேறமாதிரி முயற்சிக்கிறேன். அப்புறம் இந்த கதைல வர ரியாஸ் இந்த ரியாஸ் கிடையாதுங்க. அதுமாதிரிதான் விஜய் , அருண் , ஜெய் மற்றும் சௌந்தர் அவங்களுக்கும் இந்த விஜய் , அருண்ஜெய்சௌந்தருக்கும்  தொடர்பு இல்லை )

35 comments:

LK said...

pnkurippu sirikkavaithathu.. kathai karuthullathu

சௌந்தர் said...

2 வது வீதில ஒரு மரம் பார்த்தேன் அதைய எப்படியாவது நம்ம வீட்டுக்கு கொண்டு வந்திட்டா போதும் ..!" என்றான்.//

இதுக்கு பிறக்கு சிரிப்பு அடக்க முடியலை ரொம்ப நல்ல கருத்தும் இருக்கிறது செல்வா இன்னும் சிரிப்பு வருது

அருண் பிரசாத் said...

நன்றாக இருந்தது. சிரிப்பும் வந்தது. வாழ்த்துக்கள்

விஜய் said...

மிக அருமை தம்பி,

எனக்கென்னவோ உன்கிட்ட ஒரு பொண்ணு சொல்லி இருக்குன்னு நினைக்கிறேன், கடி போடுவதை விட்டு விட்டு மக்களுக்கு கருத்து சொல்லு என்று, அதான் இப்படி ஆரம்பிச்ச மாதிரி தெரியுது தம்பி,
எப்படியோ கதையும் அருமை, தொகுத்த விதமும் அருமை, கடைசியில் வைத்த கருத்தும் அருமை...

செல்வா தம்பியா இது என்று வியக்கவைத்துவிட்டது அனைத்தும்..

வாழ்த்துக்கள் தம்பி

வெறும்பய said...

என்ன ராசா இது... இப்படியெல்லாம்.. ஏரியா மாறி வந்திட்டனொன்னு சந்தேகமா இருக்கு...

TERROR-PANDIYAN(VAS) said...

இங்க பாருடா இவரும் திருந்திடாறு.... நல்ல கருத்து சொல்லி இருக்காரு....

கே.ஆர்.பி.செந்தில் said...

எத்தனை மரம் இதுவரை வளர்திருகீங்க தம்பி ...

ப.செல்வக்குமார் said...

///
TERROR-PANDIYAN(VAS) said...
இங்க பாருடா இவரும் திருந்திடாறு.... நல்ல கருத்து சொல்லி இருக்காரு...///

ஐயோ .. அப்படி நினைச்சிடாதீங்க ..
நான் மொக்கை தான் முயற்சித்தேன்..
ஆனா அது இப்படி ஆகிடுச்சு ...!!

ப.செல்வக்குமார் said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
எத்தனை மரம் இதுவரை வளர்திருகீங்க தம்பி ...
///
அண்ணா நான் இருக்கறது கிராமத்துல .. எங்க வீட்ட சுத்தி நிறைய மரம் இருக்கு ..!!

திருஞானசம்பத்.மா. said...

நேத்து நீ சிறுகதை எழுதப் போறேன்னு சொன்னப்பவே நான் கொஞ்சம் எச்சரிக்கையா இருந்துருக்கனும்..!!

செல்வாவின் பதிவில் ஒரு வித்தியாசமான இடுகை. வாழ்த்துகள் தம்பி..

திருஞானசம்பத்.மா. said...

//.. எங்க வீட்ட சுத்தி நிறைய மரம் இருக்கு ..!! ..//

அட ங்கொக்கமக்க..! அவரு உங்க வீட்ல எவ்ளோ இருக்குன்னு கேக்கல.. நீ எவ்ளோ வளர்த்திருக்கன்னு தான் கேட்டாரு..

ப.செல்வக்குமார் said...

நம்ம வீட்ட சுத்தி இருக்கறதெல்லாமே நாம வளர்க்கரதுதானே ...!!
நான் விதை போட்டு சுமாரா ஒரு 7 மரம் வளர்த்திருப்பேன். அதவிட இப்ப கூட அந்த சிவப்பு கலர் பூ பூக்கும் மரம் , அதன்ன இந்த கோபி போற வழில இருக்கும் ல அந்த மரம் வச்சிருக்கேன் ..!!வளர்ந்த்துட்டிருக்கு ...!!

திருஞானசம்பத்.மா. said...

அது அழகுக்காக வளர்க்கும் மரம்னு நினைக்கிறேன்..
வாக மரம் கூட செகப்பு கலர்ல தான் பூ பூக்கும்..

ப.செல்வக்குமார் said...

வாக மரம் தான் அண்ணா ...!!

ஜில்தண்ணி - யோகேஷ் said...

///
TERROR-PANDIYAN(VAS) said...
இங்க பாருடா இவரும் திருந்திடாறு.... நல்ல கருத்து சொல்லி இருக்காரு.//

என்னங்க வடிவேல் கூட ஹீரோவா நடிச்சிருக்காரு,அதுனால் அவர் காமெடி பீசு இல்லனு சொல்ல முடியுமா

நாலு மொக்கை பதிவுக்கு இடையில் ஒரு நல்ல பதிவு :)

ஜில்தண்ணி - யோகேஷ் said...

மாப்ள நிறைய மரம் வளத்துட்டேன்ங்குற

எத்தன பொன்னுங்கள்ட செடி வாங்கிருப்பியோ :)

கதையும் கருத்தும் செம செம மாப்பி :))

Sangkavi said...

கருத்துக்களுடன் கூடிய அழகான கதை....வாழ்த்துக்கள் நிறைய எழுதுங்க....


நானும் உங்க ஊர்க்காரந்தான்.....

ஜீவன்பென்னி said...

நல்லாயிருக்கு செல்வா. சொல்லவந்தத தெளிவாதான் சொல்லியிருக்கீங்க.

ஜீவன்பென்னி said...

நான் எங்க வீட்டு தோட்டத்துல இரண்டு வேப்ப மரம் வச்சேன். இன்னைக்கு இரண்டும் எங்க வீட்டு மேல உயரமா வளர்ந்து நிக்குது செல்வா. அதன் வளர்ச்சிய பார்க்கும் போது கிடைக்கக் கூடிய நிறைவும் மகிழ்ச்சியும்.... வார்த்தைகளில் சொல்ல முடியாது.

cs said...

hahahahahahahahahahahha...................

ennaala sirippa adkka mudiyala.

Chitra said...

........ நல்ல கருத்தை, நகைச்சுவையுடன் சொல்லி இருப்பது நல்லா இருந்தது.... இது "சிறு" கதையா?

பின்னோக்கி said...

வித்தியாசமாக இருக்கிறது. நல்ல ஒரு செய்தியுடன், நடுவே சிறிய சிரிப்பு காதல் கதை. அதுவும் அந்த பெரிய மரத்தை பிடுங்குவது :).

நன்றாக இருக்கிறது எழுத்து நடை. பெரிய பதிவு என்றாலும், விடாமல் முழுவதும் படிக்க வைத்தது. அருமை

Jey said...

ஹஹஹஹா, நல்ல கருத்து, நகைச்சுவையுடன்...

சூப்பர்:)

dheva said...

என் பாராட்டுக்கள் தம்பி செல்வாவிற்கு.....

இதைத்தான் உன்னிடம் எதிர்ப்பார்ப்பதாய் அன்று ஒரு நாள் சொன்னேன்....! சிரிக்க வைக்கும் திறன் உன்னிடம் அபரிதமாக இருக்கிறது. இதனுடன் கொஞ்சம் கருத்தும் கலந்தால்...சூப்பர் ஹிட் பா....


தொடர்ந்து எழுது....கலைவாணரின் பாணியைக் கைக் கொள்! வாழ்த்துகள் தம்பி!

ப.செல்வக்குமார் said...

நன்றி
LK அண்ணா ...
சௌந்தர் அவர்களுக்கும் ..
அருண் அவர்களுக்கும் ...
விஜய் அவர்களுக்கும் ...
வெறும்பய அவர்களுக்கும் ...
TERROR - PANDIYAN அவர்களுக்கும் ...
K.R.P. செந்தில் அவர்களுக்கும் ...
திருஞான சம்பத் அவர்களுக்கும் ...
ஜில்தண்ணி அவர்களுக்கும் ..
சங்கவி அவர்களுக்கும் ...
ஜீவன் பென்னி அவர்களுக்கும் ..
CS அவர்களுக்கும் ...
சித்ரா அவர்களுக்கும் ...
பின்னோக்கி அவர்களுக்கும் ...
ஜெய் அவர்களுக்கும் ...
தேவா அவர்களுக்கும் ...

Riyas said...

கதை நல்லாருக்குங்க சிரிப்பையும் தருகிறது சிந்திக்கவும் வைக்கிறது கதையில் என் பேரையும் சேர்த்து கடைசியில லிங்க கொடுத்து இவன் அவன் இல்லன்னு சொல்லிட்டிங்களே.. ஹா ஹா...

ப.செல்வக்குமார் said...

நன்றி ரியாஸ் ...!!

வால்பையன் said...

நானும் உதவி பண்றேன்!

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

alilrahman said...

total weast

Jeyamaran said...

*/நாட்கள் நகர்ந்தது. 8 ஆம் நாள் செடி கொஞ்சம் வாடி இருந்தது . அலுவலகத்திலிருந்து வந்த ரியாஸ் " மச்சி , செடி வாடிப் போச்சு .. என்ன பண்ணலாம் ..? " என்றான் .
"டாக்டர் கிட்ட கூட்டிட்டு போ . ஒரு ஊசி போட்டார்னா சரியாய்டும் .? " என்று கோபமாக கூறிவிட்டு வெளியே சென்று விட்டன சௌந்தர். அவனது கோபத்திலும் நியாயம் இருந்தது. அந்தச் செடி வந்ததிலிருந்து கடந்த 8 நாட்களாக கவிதை சொல்கிறேன் என்று அனைவரின் உறக்கத்தையும் கெடுத்து வந்தான். இதை விட நேற்று மருத்துவர்கள் பயன்படுத்தும் stethoscope ஐ எடுத்து வந்து அவளது இதயத்துடிப்பினை கேட்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தது இவர்களிடையே பெரும் எரிச்சலை உண்டாக்கியிருந்தது./*
மிகவும் அருமை சிரிப்பு பொருகமுடியல

சௌந்தர் said...

alilrahman said...
total weast//

@@@@alilrahman said... இங்க என்ன கணக்கு பதிவா இருக்கிறது total weast என்று சொல்வதற்கு நல்ல பாருங்க பாஸ்... இது நகைசுவை கலந்த கருத்து உள்ள கதை...

ச.சத்தியதாஸ் said...

nalla iruku anna.siripagavum irruku


visit my blog : maatramvalaipoo.blogspot.com

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

பல்பு வாங்கின கதை கேள்விப் பட்டிருக்கேன், மரச் செடி வாங்கின கதை இப்பதான் படிக்கிறேன்.
நல்லா இருக்கு, செல்வா!

வினோ said...

nalla irukku selva...