வழக்கம் போல ஜூன் 8 அன்று காலையில் ரேடியோ மிர்ச்சி ல " Hello கோயம்புத்தூர் with பாலாஜி" கேட்டுட்டிருந்தேன் . அன்னிக்கு அவர் எடுத்திக்கிட்ட தலைப்பு மற்றும் அவரோட ஆவேசம் என்ன ரொம்பவே பாதிச்சது. அவர் "போபால் விசவாயு " பற்றின தகவல்களைத்தான் பேசினார் . நாம 7 அல்லது 8 ஆம் வகுப்பில் வரலாற்றுப்பாடத்தில் படித்த ஒரு விசயத்துல இவ்ளோ இருக்கா அப்படின்னு அதுக்கு அப்புறம் தான் நான் தெரிஞ்சுக்கிட்டேன். இந்த நிகழ்வு நான் பிறப்பதற்கு முன்னால் நடந்த ஒரு கொடூரம். அத பத்தி நான் கேட்ட விசயங்கள் , நாழிதள்களில் மற்றும் இணையத்தளத்தில் நான் சேகரித்த விசயங்கள் தான் இந்த பதிவிற்கு காரணம்.!
போபால் மத்திய பிரதேசத்தின் தலைநகர் . அங்கு "UNION CARBIDE CORPORATION (UCC)" என்ற அமெரிக்க நிறுவனத்தின் இந்திய கிளை "UNION CARBIDE INDIA LTD(UCIL) பூச்சிக்கொல்லி மருந்துகளை தயாரித்து வந்தது. 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 -3 ஆம் தேதி நள்ளிரவு அந்த தொழிற்சாலையிலிருந்து " Methyl IsoCyanate (MIC)" என்ற நச்சு வாயு வெளியேறியது . இந்த வாயுவை சுவாசித்த சுமார் 25,000 பேர் உயிரிழந்தனர். மேலும் 80,000 அதிகமானோர் பார்வை இழப்பு , உடல் உறுப்புகள் செயலிழப்பு என்று கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.அவர்களின் துயரங்கள் இன்றளவும் குறைந்தபாடில்லை.. அங்கு பிறக்கும் குழந்தைகள் பார்வை இல்லாமலோ , கை கால்கள் இல்லாமலோ , உடல் ஊனத்துடனோ பிறக்கின்றன.
இத்தனை கொடுமைகளுக்கு காரணமான அந்த தொழிற்சாலையின் நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்களின் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 7, 2010 அன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது .இந்த தீர்ப்பு மக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் தலைவர் " Warren Anderson " என்ற அமெரிக்கர் தலை மறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் . மீதமுள்ள 8 அதிகாரிகள் மீது வழக்கு விசாரணை நடை பெற்று அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் ரூபாய் 25,000 செலுத்தி ஜாமீனில் வெளிவரலாம் என வழக்கு முடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்த துளிகள் :
* .1984,December 3 : விசவாயு வெளியேறி 20,000 பேர் உயிரிழப்பு .80,000 பேர் கண்கள் மற்றும் உடல் உறுப்புகள் பாதிப்பு.
*.1984,December 4 : UNION CARBIDE நிறுவனத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் தலைவர் " Warren Anderson " கைது செய்யப்பட்டு மத்தியப்பிரதேச போலீசாரால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
*.1984,December 6 : வழக்கு CBI க்கு மாற்றப்பட்டது.
*.1985 : அமெரிக்க நீதி மன்றத்தில் அப்போதைய அமெரிக்க டாலர் மதிப்பில் 3.3 பில்லியன் டாலர் நஷ்ட ஈடாக கேட்டு இந்தியா வழக்கு தொடர்ந்தது.
*.1989 : நீதிமன்றத்திற்கு வெளியே மத்திய அரசுக்கும் UNION CARBIDE நிறுவனத்திற்கும் ஏற்பட்ட சமரசத்தை தொடர்ந்து UNION CARBIDE நிறுவனம் 470 மில்லியன் டாலரை நஷ்ட ஈடாக வழங்கியது . அப்போதைய மதிப்பு 715 கோடி ரூபாய்.
*.1992 : UNION CARBIDE நிறுவனம் வழங்கிய 470 மில்லியன் டாலரின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடாக வழங்கப்பட்டது. பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகததால் " Warren Anderson " தலை மறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
*.2004 : UNION CARBIDE நிறுவனம் வழங்கிய 470 மில்லியன் டாலரின் மீதி தொகையையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
*.2010 ,ஜூன் 7 : குற்றம் சாட்டப்பட்ட 8 அதிகாரிகளும் குற்றவாளிகள் என்று நீதி மன்றம் தீர்ப்பளித்தது.
*.இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 62,000 ரூபாயும் , பாதிக்கப்பட்டவர்களுக்கு 25,000 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
எவ்வளவு பெரிய கொடுமை :
அந்த ஆலையில் நடந்த இந்த மாபெரும் கொடூரம் ஒரே நாளில் நடைபெறவில்லை என்றே ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
*.பாதுகாப்பு சாதனங்கள் பணத்தை மிச்சப்படுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
*.சரியான பாதுகாப்பு முறைகள் இல்லாததால் அந்த ஆலை 1980 ஆம் ஆண்டு துவக்கத்தில் நிறுத்தப்பட்டது.
*.அநேக பாதுகாப்பு கருவிகள் சரியாக பராமரிக்கப்படாததால் செயலிழந்துள்ளன.
*.ஆபத்தான வேதிப்பொருட்களை முறையான Tank களில் தேக்கிவைக்கவில்லை.
*.1981 ஆம் ஆண்டு தொழிலாளி ஒருவர் ஆலையின் உள்ளே நச்சு புகை தாக்கி இறந்துள்ளார் .
*.1982 ஆம் ஆடு அநேக தொழிலாளிகள் நச்சு வாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர் .
*.UNION CARBIDE நிறுவனம் 1979 ஆம் ஆண்டிலிருந்து பலமுறை எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த கொடூர சம்பவம் பற்றி மேலதிக தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.
இந்த துயர சம்பவத்திற்க்கான தீர்ப்பு மிக மிக தாமதமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் இந்திய சட்டம் என்ன செய்துள்ளது என்பது குறித்து உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்..
(நன்றி Radio Mirchi பாலாஜி அண்ணா , தினகரன் மற்றும் Wikipedia)

3 comments:
செல்வா ...
மிக அருமையான அவசியமான அவசரமான பதிவு தோழரே ...
உங்க பதிவோட தலைப்பே சொல்லிடுது எல்லாத்தையும் ஒரு வார்த்தையில ...
உங்கள் உணர்வோடு நானும் பங்கு கொள்கிறேன் ...
Selva!! thanx for making ur bit of contribution in such a sensitive issue!! plz xpress ur anger in all important issues!!! be sensitive to thngs tat r happening arnd u!!! one more thing express thse kinda posts in ur facebook & orkut profile, so tat many will b able to read!!! here only limited ppl mite know about it!!!
dear friend,
I am very thank full to u regarding this kind of information. Also i am sure this should be give some awareness to our peoples.Keep up the good work.All the best.
Post a Comment