Thursday, June 24, 2010

எருமையும் மாடும்

(அப்படியே எதையாவது கிளப்பி விடலாம்னு ...)

மாடு : ஏய் ! எரும இங்க மேயாத , அது என்னோட இடம் . நான் தான் மேய்வேன்..!

எருமை : எதுக்கு , ஓனர் என்னையும் இங்கதான் மேய சொன்னார்.. உன்னோட இடம்னு பட்டா  போட்டு வச்சிருக்கியா ..?

மாடு : ஏய் , ஒழுக்கமா அந்த பக்கம் போய்டு , இல்லனா நடக்கறதே வேற ..


எருமை : ஏய் , நான் ஏன் இங்க மேயக்  கூடாது ., ஓனர் நம்ம ரெண்டு பேரும் மேயறதுக்கு தானே இங்க கட்டிருக்கார்..!


மாடு : நீ ஏன் இங்க மேய கூடாதுனா, நீ கருப்பு நான் வெள்ளை.. நீ கீழ் ஜாதி , நான் மேல் ஜாதி ..


எருமை : நீ மேல் ஜாதியா..? எப்டி..?


மாடு : என்னோட பால எடுத்து தான் சாமி சிலைக்கு ஊத்துவாங்க .. அப்ப நான் மேல் ஜாதி தானே ..


எருமை : நானும் நீயும் ஒரே புல்லைத்தான் மேயுறோம்.. அப்புறம் எப்பிடி உன்னோட பால் மட்டும் புனிதம் ஆகும் ..?


மாடு : அதுதான் உயர்ந்த ஜாதிங்கறது   ..!


எருமை : உயர்ந்த ஜாதியும் இல்ல , மயிரும் இல்ல .. என்னோட பால்ல வெண்ணை அதிகம் , அத கொண்டு போய் சாமி சிலை மேல ஊத்தினா கழுவறது சிரமம் .. அதனால கழுவறதுக்கு மொட பட்டுட்டு உன்னோட பால்தான் நல்லதுன்னு ஒரு பிட்ட போட்டு விட்டுட்டாங்க .. இது தெரியாம நீயெல்லாம் பேசுற ..!

மாடு : அதவிட நீ எமனோட வாகனம் .. நான் புனிதமானவன் ..

எருமை : எமன் இன்னுமா வாகனத்த மாத்திக்கல..? அது சரி அப்படியே நான் எமனோட வாகனம்னே வச்சிக்கிட்டாலும் என் மேல ஏறி அவர் எத்தன பெற கொல்ல முடியும் .. என்னை சோம்பேறி அப்படின்னு வேற சொல்லுறீங்க.. அன்னிக்கு கூட மங்களூர்ல விமானம் விபத்தாச்சே, அப்ப எருமை மேல ஏறியா எமன் போனார்.. அப்படி போனா விமானத்த எப்பிடி கீழ தள்ள முடியும்.. எனக்கு தான் பறக்க தெரியாதே..! யாரவது எருமை எமனோட வாகனம்னு சொல்லி பாருங்க ..!

மாடு : என்ன சொன்னாலும் நீ எமனோட வாகனம் தான் ..

எருமை : என்னைவிட உன்னாலதான் அதிகமா சாகுறாங்க ஜல்லிக்கட்டு அப்படிங்கற பேருல.. அப்படினா நீ எமனோட டைரக்ட் ஏஜென்ட்டா...?

மாடு : என்னோட யூரின (கோமயம் ) எடுத்து நல்லது அப்படின்னு  வீட்டுக்குள்ள தெளிச்சுக்குறாங்க ... இதுக்கு என்ன சொல்லப்போறே...?

எருமை : உனக்கும் அவுங்களுக்கும் அறிவே கிடையாது .. இதுல நான் என்னத்த சொல்லுறது .. நான் போய் மேயுறேன்.. அப்புறம் என்னோட கன்னுக்குட்டிதான் பால் பத்தாம கத்தும் .. உன்ன மாதிரி முட்டளோட பேசி என்னோட நேரத்த வீணக்க விரும்பல ... என்னமோ பண்ணி தொலை ..!!

(பின்குறிப்பு : என்னோட வேலை முடிஞ்சதுங்க.. எதாவது தப்பா பேசிருந்தா அது என்னோட தப்பில்லைங்க.. அந்த அஞ்சு அறிவு உள்ள எருமையோட தப்புங்க.. நான் அதுங்க பேசுனத எழுதிருக்கேன் அவ்ளோதான் ...!!)

16 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அந்த அஞ்சு அறிவு உள்ள எருமையோட தப்புங்க.. நான் அதுங்க பேசுனத எழுதிருக்கேன் அவ்ளோதான் ...//

ne erumaiyoda agentaa? hehe

Jeyamaran said...

*/எமன் இன்னுமா வாகனத்த மாத்திக்கல..? அது சரி அப்படியே நான் எமனோட வாகனம்னே வச்சிக்கிட்டாலும் என் மேல ஏறி அவர் எத்தன பெற கொல்ல முடியும் .. என்னை சோம்பேறி அப்படின்னு வேற சொல்லுறீங்க.. அன்னிக்கு கூட மங்களூர்ல விமானம் விபத்தாச்சே, அப்ப எருமை மேல ஏறியா எமன் போனார்.. அப்படி போனா விமானத்த எப்பிடி கீழ தள்ள முடியும்.. எனக்கு தான் பறக்க தெரியாதே..! யாரவது எருமை எமனோட வாகனம்னு சொல்லி பாருங்க ../*

மத்தவங்களுக்கு என்ன பிடிச்சிருக்கும்னு எனக்கு தெரியாது ஆனால் எனக்கு இந்த வரி ரொம்பவே பிடிச்சிருக்கு நண்பரே

சௌந்தர் said...

அந்த அஞ்சு அறிவு உள்ள எருமையோட தப்புங்க.. நான் அதுங்க பேசுனத எழுதிருக்கேன் அவ்ளோதான் ...//
அருமை நண்பரே நீங்கள் நகைசுவை மன்னன்

Unknown said...

தம்பி, நல்லா எழுதி இருக்க..

Riyas said...

ஆஹா,,,

வால்பையன் said...

//உயர்ந்த ஜாதியும் இல்ல , மயிரும் இல்ல//


சாதியே இல்ல!

Chitra said...

எதாவது தப்பா பேசிருந்தா அது என்னோட தப்பில்லைங்க.. அந்த அஞ்சு அறிவு உள்ள எருமையோட தப்புங்க.. நான் அதுங்க பேசுனத எழுதிருக்கேன் அவ்ளோதான் ...!!)


..... அப்படியா? சரிதான்

மங்குனி அமைச்சர் said...

நடக்கட்டும் , நடக்கட்டும் கால்நடைகள்

சாந்தி மாரியப்பன் said...

//எதாவது தப்பா பேசிருந்தா அது என்னோட தப்பில்லைங்க.. அந்த அஞ்சு அறிவு உள்ள எருமையோட தப்புங்க.. நான் அதுங்க பேசுனத எழுதிருக்கேன் அவ்ளோதான் //

நல்லதுங்க :-))

கவிதா said...

நல்லாயிருந்தது,ஐந்தறிவு ஜீவன்கள் பேசரதா,
சொல்லியிருந்தாலும் உண்மையை
சொல்லியிருக்கீங்க

kk said...

சிந்தனயை தூண்டும் பதிவு

Jey said...

அவங்கவங்க அடிதடி வெட்டு குத்து ரேஞ்சுக்கு நடத்துர கச்சேரிய, சந்தடியில்லாம கமுக்கம நடத்துரீங்க. அடிக்கடி உங்க வீட்டுக்கு வந்தா ந்றய ரோசனை கெடைக்கும் போல இருக்கே?.
கலக்குரீங்க சார். வர வர இந்த ரெண்டு மாடுகளுக்கும் மூக்கனாங்கயிறு ( கருப்பனுக்கு ஒத்த கயிறுலேயும், வெள்ளையனுக்க் ரெட்டை மடிப்பு கயிறுலையும்) குத்துறது எல்லோருக்கும் நல்லதுனு தோனுது சார்.

டிஸ்கி : இது நான் வெள்ளந்தியா சொன்னது சார், எந்த உள்குத்தும் இல்லை.

Jayadev Das said...

ஜாதிப் பிரச்சினையை மாடுங்க வரைக்கும் கொண்டுபோய் விட்டீங்களா? ஒன்னு புரிஞ்சுக்குங்க, பசுவின் சாணம், மூத்திரம் எல்லாம் மருத்துவ குணங்கள் நிறைந்தது என்று நிரூபிக்கப் பட்டுள்ளது. பசுவின் சாணத்தால் மெழுகும் போது, அது கிருமி நாசிநியாகச் செயல் படுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பசுவின் மூத்திரத்தில் இருந்து நிறைய மருந்துகள் தயாரிக்கப் பட்டு மக்கள் பயன் படுவதும் கண்கூடு. இது போன்ற பயன்கள் எருமை மூத்திரத்திலிருந்து பெற முடியாது. பாலிலும் வேறுபாடு உண்டு. பசுவின் பால் புத்தியை மேம்படுத்தும், அதிலிருந்து கிடைக்கும் தயிர், மோர், வெண்ணெய், நெய் அத்தனைக்கும் சிறப்புப் பண்புகள் உண்டு. இதை நம்புவதும்/கேலி செய்வதும் உங்கள் விருப்பம். இந்த உண்மை நம் நாட்டில் அரசியலாகவும், மதச் சண்டையாகவும் ஆக்கப் படுகிறது என்பது தான் வேதனை.

செல்வா said...

மன்னிச்சிருங்க ஜெயதேவா ..!! எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கிறது ...
ஆனால் அதே சமயம் எருமை சாணமும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டதா என்பது எனது கேள்வி .. இதனை தயவு செய்து நக்கலாக எடுத்துக்கொள்ளாதீர்கள் .. எங்கள் வீட்டிலும் பசு மாடுகள் உள்ளன ..

மேலும் இந்த பதிவினை நேரடியாக எருமைக்கும் மாட்டிற்கும் நடந்த உரையாடலாக எழுதியிருந்தாலும் அது மனிதர்களுக்குள் இருக்கும் ஜாதி என்கிற விஷத்தை மறைமுகமாக தாக்கவே இந்தப்பதிவு..பகிர்வுக்கு நன்றி .. மேலும் தங்களின் வருகையை எதிர்பார்க்கிறேன் ..

அ.சந்தர் சிங். said...

எருமை : உனக்கும் அவுங்களுக்கும் அறிவே கிடையாது .. இதுல நான் என்னத்த சொல்லுறது .. நான் போய் மேயுறேன்.. அப்புறம் என்னோட கன்னுக்குட்டிதான் பால் பத்தாம கத்தும் .. உன்ன மாதிரி முட்டளோட பேசி என்னோட நேரத்த வீணக்க விரும்பல ... என்னமோ பண்ணி தொலை ..!!
miga sariyana punch ithu.

unarnthal sari.

priyamudanprabu said...

//அந்த அஞ்சு அறிவு உள்ள எருமையோட தப்புங்க.. நான் அதுங்க பேசுனத எழுதிருக்கேன் அவ்ளோதான் ...//
great escapeeeeeeeeeeeeeeeeee