Friday, July 2, 2010

பேனா கொண்டுவாங்கப்பா

"இந்தாடா.. உனக்கு சாப்பாடு ரெடி." என்று சாப்பாட்டு பையை நீட்டினாள் ரமேஷின் தாயார்.
"டேய் ரமேஷ் ஆபீசுக்கு போகும் போது அப்படியே பேங்குக்கு போய் பணம் எடுத்துட்டு போய்டுடா.." இது ரமேஷின் அப்பா.
"நானா ..?"
"ஆமா நீதானே A.T.M கார்ட தொலைச்சே..!"
" நான் ஒண்ணும் தொலைக்கல , இங்க தான் வச்சேன். எலி எதாவது எடுத்துட்டு போயிருக்கும்.."
"ஆமா எலி எடுத்துட்டு போய் முறுக்கு வாங்கி சாப்பிட்டிருக்கும்..!" இது அம்மாவின் குரல்.
"இல்ல அது பூனைக்கு மணி கட்டலாம்னு பேசிட்டிருந்துச்சு.. மணி வாங்க பணம் வேணும்ல அதனாலதான் A.T.M கார்ட திருடிட்டு  பணம் எடுக்க போயிருக்கும்..சரி விடுமா.. அதுதான் புது A.T.M கார்டுக்கு அப்பளை பண்ணியாச்சுல , ஒரு வாரத்துல வந்திடும் " என்று சிரித்துக்கொண்டே விடை பெற்றான்.

வங்கியில் பணமெடுக்கும் படிவம் பூர்த்தி செய்து விட்டு வரிசையில் நின்றுகொண்டிருந்தான் .. அப்போது அங்கு வந்த ஒருவர்.,

"சார் , கொஞ்சம் பெண் கொடுக்குறீங்களா..?" என்றார்.
(இங்கே பெண் என்பதை ஆங்கில உச்சரிப்பாக படிக்கவும். !! )

ரமேஷ் வழக்கம் போலவே மூடியை மட்டும் கொடுத்துவிட்டு போதும்களா என்றான்..

"விளையாடாதீங்க சார் ..!"

"நீங்கதானே கொஞ்சம்னு கேட்டீங்க அதான் அப்படி .சரி இந்தாங்க ." என்று நீட்டினான்.

அவரும் பேனாவை வாங்கிக்கொண்டு " சார் 5 நிமிசத்துல கொடுத்திடறேன் " என்றார்.

"சரிங்க .." என்ற ரமேஷ் வரிசையில் ஐக்கியமானான்.


பணம் எடுத்துக்கொண்டு வெளியில் வருவதற்குள் வைபரெட் செய்து வைத்திருந்த ரமேஷின் தொலைபேசி இரண்டு முறை சும்மா அதிருதுள்ள என்பது போல அதிர்ந்தது.
அவசர அவசரமாக வங்கியை விட்டு வெளியே வந்தா ரமேஷ் தொலைபேசியை எடுத்து பார்த்தான்.அதற்குள் அடுத்த அழைப்பும் வந்தது.

"பாஸ் ., வந்திட்டே இருக்கேன்.." அவனது முதலாளி அழைப்பில் இருந்தார்  .

"எங்க இருக்கப்பா ..?" என்றார் முதலாளி ..

"நான் பஸ் ஸ்டாண்ட் பக்கமா வந்துட்டிருக்கேன் பாஸ்.."

'சரி , நல்லதா போச்சுப்பா.. நம்ம நண்பர் ஒருத்தர் பஸ் ஸ்டாண்ட்ல இருக்கார் , அவர அப்படியே கூட்டிட்டு வந்திடு.. அவர் போன் நம்பர் தர்றேன் எழுதிக்க.." என்றது ரமேஷ் சட்டைப்பையை துழாவினான்.. அப்பொழுதுதான் வங்கியில் கடன் கொடுத்த பேனாவை திரும்பி வாங்காமல் வந்துவிட்டது நினைவிற்கு வந்தது.சரி என்னை செய்வது...?

"சரி சொல்லுங்க பாஸ் .." என்று அப்படியே தனது தொலைபேசியிலே அவர் சொல்ல சொல்ல அழுத்திக்கொண்டான்.

"சரிங்க பாஸ் , நான் கூட்டிட்டு வந்திடறேன்.." என்று கூறிவிட்டு பழக்க தோஷத்தில் சிவப்பு பட்டனை அழுத்தி விட்டான்.. தொலைபேசியில் இருந்த அந்த நண்பரின் எண்கள் அழிந்து விட்டன.
"அடச்சே.. சரி இருந்தாலும் அவர் சொன்ன நம்பர் கொஞ்சம் பேன்சி இருந்ததால பரவாயில்ல." என்று அலுத்துக்கொண்டு அவர் சொன்னதாக இவன் நம்பிய அந்த எண்களுக்கு  தொலை பேசினான்.

"சார்.. நான் ரமேஷ் பேசுறேன்.. உங்களை எங்க பாஸ் கூட்டிட்டு வர சொன்னார் .. எங்க இருக்கீங்க ..?"

'நான் பஸ் ஸ்டாண்ட் ல இருக்கேன் , அந்த தண்ணி தொட்டி பக்கத்துல , பச்சக்கலர் சர்ட் போட்டிருக்கேன்.." என்றார்.

"அங்கேயே நில்லுங்க .. ஒரு நிமிசத்துல வந்திடறேன்.." தொலை பேசியை வைத்துவிட்டு அவர் இருக்கும் இடத்தை அடைந்தான் .. அங்கே ஒரு 20 வயது தோற்றத்தில் ஒரு வாலிபர் பச்சைகலர் சட்டையுடன் நின்றுகொண்டிருந்தார்.அவரை பார்த்ததும் ரமேஷுக்கு ஒரு சிறிய சந்தேகம். நம்ம பாசுக்கு இந்த வயசுல கூடவா நண்பர் இருக்கார்..? சரி போய் பார்ப்போம்.ரமேஷ் பைக்கினை அந்த பையனின் பக்கத்தில் நிறுத்தினான்.

அவனும் இவனை பார்த்ததும் "நீங்க தான் ரமேஷா..?" என்றான்.

"ஆமாங்க , உங்க பேர் என்னனு எங்க பாஸ் சொல்லவே இல்ல , உங்க பேர் என்னங்க..?"

"நான் சௌந்தர், மேட்ச் ஆரம்பிச்சிருப்பாங்களா...?" என்றான்.

இப்படி கேட்டதும் ரமேஷுக்கு சந்தேகம் மேலும் அதிகரித்தது..
"நீங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா..?"

"நான் கபடி மேட்ச்சுக்காக வந்திருக்கேன் , ஏன் தேவா இத உங்க கிட்ட சொல்லவே இல்லையா ..? , அவன்தான் என்கிட்டே ரமேஷுங்கரவர அனுப்பிருக்கேன் அவர் பஸ் ஸ்டாண்ட்ல வந்து உன்ன பிக்கப்  பண்ணிக்குவார் அப்படின்னான் " என்றான்.

அப்பொழுதுதான் ரமேஷுக்கு தெரிந்தது இது வேறு யாரோ என்று.
"சாரிங்க நான் அந்த ரமேஷ் இல்ல." நம்பர் தப்பா போட்டுட்டோமோ..? சரி பாஸ் கிட்டவே கேக்கலாம் என்று தனது முதலாளிக்கு கால் செய்தான். Busy  என்று வந்தது.சரி கொஞ்ச நேரம் கழித்து கூப்பிடலாம் என்று நின்றுகொண்டிருந்தான்.. சிறிது நேரத்தில் முதலாளியிடமிருந்து அழைப்பு வந்தது.

"சொல்லுங்க பாஸ்., அவர் நம்பர் இன்னொரு தடவை தரீங்களா..? "

"அத சொல்லத்தான் கூப்பிட்டேன் , உன்கிட்ட ஒரு வேலைய கொடுத்தா எப்பவுமே உருப்படியா செய்ய மாட்டியா..? என்றார் கோபமாக.

"சா , சாரி பாஸ். அவர் நம்பர் தப்பா போட்டுட்டேன் , இன்னொருதடவ சொல்லுங்க."

இந்த முறை பேனாவில் எழுதிக்கொள்ளலாம் என்று நினைத்தான். அதனால் பக்கத்தில் ஒரு பெரியவர் சட்டையில் பேனாவுடன் நின்றிருப்பதை பார்த்தான் .
"சார் கொஞ்சம் பேனா தரீங்களா..?"

அந்தப் பெரியவர் மேலும் கீழும் பார்துதுவிட்டு பேனாவை எடுத்து நீட்டினார்.

"சொல்லுங்க பாஸ், அப்படியே அவர் பேரும் சொல்லிடுங்க " அவரிடம் பேசி முடித்தவுடன் தான் கவனித்தான் சென்ற முறை 877 ற்கு பதிலாக 887 போட்டுவிட்டதை..
சரி என்று நினைத்தபடி அந்த பெரியவரிடம் ,

"தேங்க்ஸ் சார்." என்று பேனாவை நீட்டினான் .

அதனை பெற்றுக்கொண்ட பெரியவர் " ஏன் தம்பி ஒரு பேனா கொண்டு வர மாட்டியா..? பான்ட் மட்டும் இத்தன வால் தொங்குற மாதிரி போட்டிருக்கரீங்க .." என்றார் கோபமாக.

ரமேஷ் ஒன்றும் பேசாமல் முதல்ல பேனா வாங்கணும் என்று நினைத்த படியே பைக்கை நோக்கி திரும்பிய ரமேஷின் கண்களில் அந்த பெட்டிக்கடை தென்பட்டது.. சரி இங்க போய் ஒரு பேனா வாங்கிட்டு போலாம் என்று பெட்டிக்கடை நோக்கி நடந்தான் .
அங்கு வயதான ஒரு பாட்டி இருந்தார் .

"பாட்டி CELLO பேனா இருக்குமா..?"

"செல் போடற மாதிரி பேனா இல்ல தம்பி , சாதா பேனா தான் இருக்கு 2 ரூவா .!" என்றார்.

(சுத்தம்.. ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது. சரி அந்த 2 ரூபா பேனாவுல தான் ஒருதடவ எழுதிப்பார்ப்போம்.)

"சரி ஒண்ணு குடுங்க " என்று வாங்கி சட்டை பையில் வைத்துக்கொண்டு இனி அந்த ஆளை தேடுவோம் என்றபடி முதலாளி சொன்ன அந்த எண்களுக்கு அழைத்து அவர் இருக்கும்  இடத்திற்கு சென்றான்.

"சார் நீங்க தான் அருணா , நான் ரமேஷ் .எங்க பாஸ் உங்களை கூட்டிட்டு வர சொன்னார் "

"ஓ , அது நீங்க தானா ..?" என்றவருக்கு ஒரு அழைப்பு வந்தது ..
"சொல்லுங்க.." என்று உரையாடலை தொடர்ந்த அவர்  ரமேஷை பார்த்து பேனா இருக்கா  என்று கேட்டார். ரமேசும் தனது சட்டையிலிருந்து அந்த பேனாவை கொடுத்தான். எதோ எழுதிவிட்டு அழைப்பை துண்டித்த அவரது கைகளில் INK லீக் ஆகி வழிந்து  கொண்டிருந்தது. இதை பார்த்த அவர்,

"ஒரு நல்ல பேனா வச்சுக்க மாட்டிங்களா ..?" என்றார் .

ரமேஷுக்கு நீ ஒரு நல்லா பேனா வச்சுக்க வேண்டியதுதானே என்று கேட்க வேண்டும் போல இருந்தது .. இருந்தாலும் கோபத்தை அடக்கிக்கொண்டு
"போலாம் சார் .." என்றவாறே வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

(பின்குறிப்பு : இந்த கதையில் வரும் ரமேஷ் என்பவர் சிரிப்புபோலீஸ் ரமேஷ் அல்ல என்பதை கவனமுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .. நீங்கள் எதாவது கற்பனை செய்து கொண்டு எதையும் திரித்து விட வேண்டாமெனவும் தெரிவித்துக்கொள்கிறேன் )

9 comments:

சௌந்தர் said...

அடடா என் பெயர் தேவா அண்ணா பெயர், ரமேஷ் பெயர் சொல்லிட்டு.

நீங்கள் எதாவது கற்பனை செய்து கொண்டு எதையும் திரித்து விட வேண்டாமெனவும் தெரிவித்துக்கொள்கிறேன்//

இப்படி வேற சொல்லுறியா

வால்பையன் said...

இதை மொக்கை என்”பேனா”
தக்கை என்”பேனா”

மங்குனி அமைச்சர் said...

ஒரு பேனாவுக்கா போரா???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எங்க போனாலும் என் மேல கொலை வெறியோடதான் இருக்கீங்க. நான் நிறைய தடவ பேங்க்-லதான் பேனாவ தொலைச்சிருக்கேன். எதுக்கு பேங்க்-குக்கு பேனா இல்லாம வராங்களோ. இம்சைங்க

Jeyamaran said...

ஓஹோ இந்த ரமேஷ் தானா அருமை சிரிப்பு வெடிகள் வெடித்தது

விஜய் said...

தம்பி நல்லா சிரிக்க வைச்சு இருக்க, கோர்வையா எழுதி இருக்க, நல்ல கற்பனை திறன், இன்னும் நிறையா வளர்த்துக்கங்க , இன்னும் நிறையா எழுத என் வாழ்த்துக்கள்

Praveenkumar said...

கலக்கல். சிறுகதையாகவே மொக்கபோட்டு சிரிக்க வைத்து இருக்கீங்க..! வாழ்த்துகள் தொடரந்து நிறைய எழுதுங்கள்..! பாராட்டுகளுடன் பிரவின்குமார்.

santhanakrishnan said...

கதை முழுதும்
நகைச்சுவை
அடிநாதமாய்
ஓடுகிறது.
வாழ்த்துக்கள்.
தொடருங்கள்.

ப.கந்தசாமி said...

நல்லா இருக்கு, தொடருங்கள்.