"சொல்றா மாப்ள .!"
"மச்சி இன்னிக்கு எங்க வீட்டுக்கு வரன்னு சொன்னல.? "
"ம்ம்ம். சரி எப்டி வரதுன்னு சொல்லு .."
"5 நம்பர் Bus ஏறிக்க., ஊத்துப்பாளையம் Ticket வாங்கிக்க., Bus Stop ல இறங்கினதும் எனக்கு Call பண்ணு . நான் வந்து Pick Up பண்ணிக்கிறேன் ."
"சரி மாப்ள ".
"மாப்ள நான் உங்க ஊர் Bus Stop ல நிக்கிறேண்டா.!"
"சரி மச்சி , அங்கயே நில்லு ,10 நிமிசத்துல வந்திடறேன் ."
"சரி வா , மாப்ள ."
பத்து நிமிஷம் ஆகும்கிறான், எங்கயாவது பெட்டிக்கடை இருக்குதான்னு பார்த்தா ஒரு தம் போட்டிறலாம். அங்க ஒருத்தர் வர்றார் , அவரு கிட்ட கேட்டுப்பார்க்கலாம்.
(வருகிறவர் பெயர் முத்து., சரியான மொக்கை பேர்வழி , இதுவரைக்கும் யாருக்கும் ஒழுங்கான தகவல் தந்ததே கிடையாது ).
"அண்ணே இங்க பக்கத்துல பெட்டிக்கடை எங்கயாவது இருக்குமா ..?"
"(இன்னிக்கு இவன் மாட்டினான் ). இங்க எங்கிங்க அந்த மாதிரி கடையெல்லாம் இருக்கு ,
அப்படியே வச்சாலும் யாரு பெட்டி வாங்கப்போறாங்க, எல்லாம் மஞ்சப்பையிலையே கொண்டுபோய்டுவாங்க."
"நான் அந்தப்பெட்டிக்கடைய கேக்களைங்க, இந்த தீப்பெட்டி ,பீ ..(முடிப்பதற்குள்)"
"ஓ, நீங்க தீப்பெட்டி தயாரிக்கிற கடைய கேக்குறீங்களா , அதெல்லாம் சிவகாசி ல தான தயாரிப்பாங்க..??"
"இல்லிங்க , நான் Cigarette ..(மீண்டும் முடிப்பதற்குள் ..)
"இந்தப் பொட்டியவா கேட்டிங்க.."(கீழே கிடந்த ஒரு காலி Cigarette பெட்டியை எடுத்துக் காட்டுகிறார்)"
"ஆமாங்க , இந்தப் பெட்டி தான் .. இந்த பெட்டிய எங்க வாங்கலாம்..?"
"இந்தப்பெட்டிய எதுக்கு வாங்குறிங்க , அதான் நான் வச்சிருக்கேனே.!"
"இல்லீங்க இதே மாதிரி பெட்டிய எந்த கடைல வாங்கலாம்னு கேட்டேன்.(சாகடிக்கிறானே!)".
"அத இந்தப்பெட்டிய கீழே போட்டவங்ககிட்ட தானே கேக்கணும் .!"
"சரிங்க , நான் கேட்டுக்கிறேன் ,(ஆள விட்டா போதும் , சரியான லூச இருப்பன் போல )
"அப்ப நான் கிளம்பட்டும்களா..(என்று கூறிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் கிளம்பி விட்டார் )"..
தப்பிச்சேன்டா சாமி என்று தனக்குள் கூறிக்கொண்டு நின்றிருந்த குமாரின் கண்களில்
தூரத்தில் ஒருவர் வருவது தெரிந்தது. அங்க ஒருத்தர் வர்றார் , அவர்கிட்ட கேட்டுப் பார்க்கலாம்.( அவர் பெயர் அன்வர் , அனைவருக்கும் அறிவுரை சொல்பவர் . ஊருக்குள் Advise அன்வர் என்று அழைப்பர் )
இவரு கிட்ட கேக்கலாமா ..? யோசித்தான் குமார் . பார்க்க பெரியமனுசனாட்டம் இருக்கிறார் . கண்டிப்பா சொல்லிடுவார்.
"ஐயா ,இங்க பக்கத்துல பொட்டிக்கடை ஏதாவது இருக்குதுங்களா ..?
"பொட்டிக்கடையா எதுக்கு ..?
"ஒரு Cigarette வாங்கலாம்னு கேட்டேனுங்க ..!
"உனக்கு என்ன வயசாச்சு தம்பி ..?
"22 ங்க..
"பாத்தா படிச்சா பையனாட்டம் தெரியுற , Cigarette பிடிக்கறது தப்புன்னு தெரியாத..? Cigarette பிடிக்கறதனால புற்றுநோய் வரும்னு படிசிருக்கில., உலகத்திலேயே அதிக மரணத்த உண்டாக்குற காரணிகள்ள புகையிலை 2 வது இடத்துல இருக்கு . உன்ன மாதிரி பசங்க இருந்த எப்படிப்பா இந்தியா 2020 ல வல்லரசாகும் .? அப்படி அந்த கருமத்தில என்னதான் இருக்கு ..?.. etc .. (etc = உங்களுக்கு ஏதேனும் இதுபோன்ற அனுபவம் இருந்தா நினைவுபடுதிக்குங்க .!) சிறிது நேர அறிவுரைக்குப் பின்பு அவர் சென்றுவிட்டார் .
"குமார் எதுவும் பேசாமல் நின்றிருந்தான் , (மனதுக்குள் இவன்கிட்ட ஏன்டா கேட்ட ..??
எல்லோருமே இப்படியா , இல்ல எனக்கு மட்டும் இப்படி நடக்குதா..??)
அங்க ஒருத்தன் வர்றான் . அவன்கிட்ட கேட்டுப்பார்ப்போம் , அவன் என்ன சொல்லப்போரானோ..??
.(வருகிறவர் பெயர் பழனி , கணக்கில் புலி).
"அண்ணே இங்க எதாவது பெட்டிக்கடை இருக்குதுங்களா.?
"என்ன வாங்கப்போரிங்க.?
"சும்மா ஒரு Cigarette வாங்கலாம்னு .,
"ஒரு Cigarette என்ன விலைங்க ..?
"3.50 .
"ஒரு நாளைக்கு எத்தனை Cigarette குடிப்பிங்க ..?
"4,கடை எங்கினு சொன்னிங்கன்னா ..?
" அட இருங்க , அப்ப இரு நாளைக்கு 4 Cigarette னா மொத்தம் 14 ரூபாய் ஆகுது,
உங்களை மாதிரி 50 பேர் வந்தாங்கன்னா 700 ரூபாய் கிடைக்கும் . இதுல ஒரு 200 ரூபாய் லாபம் கிடைக்காதா ..?
"கிடைக்கும்க, எனக்கு பெட்டிக்கடை எங்கினு சொல்லுறிங்களா ..?
"அட நாளைக்கே நான் ஒரு பெட்டிக்கடை வைக்கிறேன் தம்பி , அப்ப வந்து வாங்கிக்கிங்க .(என்று சொல்லிவிட்டு காற்றில் கணக்கு போட்டுக்கொண்டே சென்று விட்டார் ).
எல்லா பயலுகளும் சரியான லூசுகளா இருக்கும் போல , ஒரு பொட்டிக்கடைக்கு வழி சொல்ல மாட்டேங்கிறாங்க .!(நொந்துவிட்டான் குமார்).
இனிமே எவன்கிட்டயும் வழி கேக்கப்போவதில்லை என்று நின்றுகொண்டிருந்த குமார் கட்டதுரையின் கண்களில் விழுந்துவிட்டான் . (கட்டதுரை இவர் பேருக்கேற்ற தோற்றம் கொண்டவர் , மேலும் தங்கள் ஊர் எல்லையில் புதிதாக யாரைக்கண்டாலும் அவர்களைப்பற்றிய ஜாதகம் வரை விசாரித்து விடுவார். இதனால் அவரை அனைவரும் ஊர்க்காவலர் என்றே அழைப்பர்).
"ஆரு தம்பி , புதுசாத் தெரியுது ..?
"நான் குமாருங்க , பொட்டிக்கடயப் பார்க்க, இல்ல Friend அ பர்க்கவந்தனுங்க .
"எந்த ஊரு தம்பி ..?
"பொட்டியூருங், இல்ல நம்பியூருங்.!
"College போய் பொட்டி தட்டறனுங், இல்லீங் படிக்கறனுங்.!
"இங்க ஆரூட்டுக்கு வந்த ..?
"இங்க பொட்டிக்கடை வெச்சிருக்கிராருங்கள்ள , இல்ல மணின்னு ஒரு பையன் , அவுங்கப்பா கூட பொட்டி விக்கறாருன்கள்ள., ஐயோ இல்ல Rice Mill வச்சிருக்காருங்க ..
(ஏன் எனக்கு பொட்டி பொட்டி னு வாய்ல வருது , Control Control இனிமேல் தமிழ்நாட்டுல இல்ல உலகத்துல எந்தப் பொட்டிக்கடைக்கும் போறதில்லை ).
"அப்பிடியா .. அப்புறம் ..?
அவர் அடுத்த கேள்விக்குப் போவதற்குள் மணி வந்து சேர்ந்தான். மணியைப் பார்த்த அந்த முதியவர் .,
"என்ன பேராண்டி இன்னிக்கு லீவா ..? என்றார் .
"ஆமா தாத்தா." இந்தப் பையன் என்னோட Friend , வீட்டுக்குக் கூட்டிட்டுப்போலாம்னு வந்தேன் . சரி போறோம் தாத்தா. விடை பெற்றனர் மணியும் குமாரும் .
போகும் வழியில் மணி கேட்டான் " என்ன மச்சி ஒரு மாதிரி இருக்க ..?
"இல்லையே , நல்லா தான் இருக்கேன் ,
"எங்க நல்லா இருக்க , சரி அந்தப்பக்கமா ஒரு பொட்டிக்கடை இருக்கு போய் ஒரு தம் அடிச்சுட்டுப் போலாமா ..?
"வேண்டாம் மாப்ள , நான் தம் அடிக்கிறதில்லை , அத விட எனக்கு பொட்டிக்கடைனாலே அலறுது ..! வீட்டுக்கே போலாம் ..!!!
(பின்குறிப்பு : இப்படியும் சிகரெட்டை நிறுத்தலாம் )
8 comments:
sema comedy
good joke & good thinking
அருமையான முயற்சி!
சந்திக்கும் நபர்கள் குறித்து முன் கூட்டியே அறிமுகம் தேவையில்லை, ஒவ்வொருவர் சந்திப்பையும் தனி தனி வண்ணத்தில் கொடுத்திருக்கலாம்!
பெரிதாக தெரிந்தாலும் பரவாயில்லை, உரையாடலின் தீவிரம் புரிய ஒரு வரி இடைவெளி நிச்சயம் தேவை, பேச்சுக்கும் முன் : குறியுடன் பெயர் முன்னால் இருப்பது இன்னும் சிறப்பு!
பரிட்சையில் மார்ஜின் கோடு போட்டு, தலைப்புக்கு கீழ் ஸ்கெட்ச் கொடுப்பது போல் இது!
நிச்சயம் அருமையான பதிவு, இதை அருமையான சிறுகதை வடிவமாக்கி பத்திரிக்கைக்கு அனுப்பிவைக்கலாம்! முயற்சி செய்யுங்கள்!
super selva. sirichchu maalala
sema comedy!
வலைச்சரம் மூலம் அறிந்தேன்...... வாழ்த்துக்கள்!
வால்பையன் , சொன்னா மாதிரி கொஞ்சம் டிங்கரிங் , பெயிண்டிங் பண்ணி போட்டா இன்னும் நல்லா இருக்கும் , நல்லா அருமையா எழுதுறிங்க வாழ்த்துக்கள்
செம காமெடி நண்பா...
அட்டகாசமா எழுதியிருக்கீங்க...
வால் சொன்னத வழிமொழியிறேன்... ட்ரை பண்ணுங்க... :)
நல்லா இயல்பா இருக்கு செல்வா...
Post a Comment